39வது ஆண்டாக ரூ. 1 கோடி மதிப்பில், 1 லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கி கண் பரிசோதனை முகாம் நடத்திய திருவண்ணாமலை சாரிட்டபிள் டிரஸ்ட் கோவில்பட்டி மற்றும் அகரம் புதிய சகாப்தம் லயன்ஸ் கிளப்.
திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீப விழா அன்னம் பாலிப்பு திருப்பணி குழுவின் சார்பில் அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு 39வது ஆண்டாக ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் 50 கிராமங்களை சேர்ந்த ஒரு லட்சம் அன்பர்களுக்கு வாகனங்களில் எடுத்துச் சென்று வீடு வீடாக அன்னதானம் வழங்கப்பட்டது.
அகரம் புதிய சகாப்தம் லயன்ஸ் கிளப் மற்றும் சைட் கேர் பவுண்டேஷன் இணைந்து நடத்திய மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாமில் 450க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு கண் பரிசோதனை செய்து கொண்டனர். கண் பரிசோதனை செய்து கொண்டவர்களுக்கு 150க்கும் மேற்பட்ட நபர்களுக்கு கண் கண்ணாடியும் இலவசமாக வழங்கப்பட்டது. இதன் மதிப்பு ரூபாய் 30,000 ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபவிழா அன்னம்பாலிப்பு திருப்பணி குழுவின் சார்பில் திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு 39வது ஆண்டாக ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் 50 கிராமங்களை சேர்ந்த ஒரு லட்சம் அன்பர்களுக்கு வாகனங்களில் உணவு எடுத்துச் சென்று வீடு வீடாக அன்னதானம் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
நாயுடு மங்கலம் ஜெயலட்சுமி அம்மாள் ஜெயராம கவுண்டர் திருமண மஹால் உரிமையாளர் மணிகண்டன் அவர்கள் மாபெரும் கண் பரிசோதனை முகாம் மற்றும் மாபெரும் அன்னதானம் செய்வதற்கு இலவசமாக மண்டபத்தை வழங்கி அங்கேயே உணவு சமைப்பதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பான முறையில் முன்னின்று செய்து இருந்தார்.
கண் பரிசோதனை செய்து இலவச கண் கண்ணாடி வழங்கி, இலவசமாக 50 கிராம மக்களுக்கு வீடு வீடாக எடுத்துச் சென்று அன்னதானம் வழங்கிய திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீப விழா அன்னம் பாலிப்பு திருப்பணி குழு, அகரம் புதிய சகாப்தம் லயன்ஸ் கிளப் மற்றும் சைட் கேர் பவுண்டேஷன் ஆகியோருக்கு பொதுமக்கள் பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்தனர்.
Comments
Post a Comment