பாரத பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாள் விழா, பாஜக கொடியேற்றம், மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் என முப்பெரும் விழாவாக பாஜக மாவட்ட பொதுச்செயலாளர் ரமேஷ் தலைமையில் கொண்டாட்டம்.
திருவண்ணாமலை தெற்கு மாவட்டம் பாஜக, கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதி, புதுப்பாளையம் ஒன்றியம், உண்ணாமலைபாளையம் கிராமத்தில் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் பிறந்தநாள் விழா முப்பெரும் விழாவாகக் கொண்டாடப்பட்டது.
பாஜக கொடியேற்று விழா மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உண்ணாமலைபாளையம் கிராமம், புதூர்செங்கம் கிராமம் ஆகிய பகுதிகளில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட ஊனமுற்றவர்களுக்கு மளிகை பொருட்கள் மற்றும் இனிப்புகள் ஆகியவை ஒன்றிய குழு உறுப்பினரும், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக பொதுச் செயலாளருமான K.ரமேஷ் அவர்களால் பிரதமரின் பிறந்த நாளை முன்னிட்டு வழங்கப்பட்டு முப்பெரும் விழாவாக வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
விழாவின் சிறப்பு அழைப்பாளராக கோட்ட அமைப்பு செயலாளர் குணசேகரன், மாவட்ட துணைத்தலைவர் ராதாகிருஷ்ணா, மாநில பொதுக்குழு உறுப்பினர் ஆறுமுகம், மாவட்ட இளைஞரணி தலைவர் பாலாஜி,OBC அணி மாவட்ட துணை தலைவர் ஜெயராஜ், பட்டியல் அணி மாவட்ட பொதுச்செயலாளர் ஜெய்நாத், பிரச்சார பிரிவு மாவட்ட செயலாளர் தமிழரசி, அழகேசன், முருகேசன் மற்றும் உண்ணாமலைபாளையம் கிளை மூத்த நிர்வாகி மன்னன் அவர்கள் கொடியேற்ற ஊர் பொதுமக்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment