தொழில் அங்கீகாரம், இலவச பஸ் பாஸ் உள்ளிட்டவை வழங்க வேண்டும், BMS திருமண அமைப்பாளர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை
தொழில் அங்கீகாரம், இலவச பஸ் பாஸ், பென்ஷன் உள்ளிட்டவை வழங்க வேண்டும், திருவண்ணாமலை செட்டி தெருவில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற BMS திருமண அமைப்பாளர்கள் பொதுக்குழு கூட்டத்தில் தமிழக அரசுக்கு கோரிக்கை.
திருவண்ணாமலை செட்டி தெருவில் உள்ள அமுதா திருமண மண்டபத்தில் BMS தமிழ்நாடு பாரதிய திருமண அமைப்பாளர் நலச்சங்க மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.இந்தக் கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டனர்.
சிறப்பு அழைப்பாளராக ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் மக்கள் தொடர்பாளர் ராம ராஜசேகர் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.மாநிலத் தலைவர் செங்கம் ராஜா தலைமை தாங்கினார்.
மாநில பொதுச்செயலாளர் விக்னேஸ்வரன், மாநில அமைப்புச் செயலாளர் தங்கராஜ், மாநில பொருளாளர் சக்தி ராணி, மாநிலச் செயலாளர்கள் சாந்தி, ராமலட்சுமி, மாநிலத் துணைத் தலைவர்கள் சுசிலா தேவி, ஆறுமுகம், அருண்குமார் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் தமிழகம் முழுவதுமிருந்து கலந்து கொண்டனர்.
இறுதியாக திருவண்ணாமலை மாவட்ட தலைவர் மூர்த்தி நன்றி உரை ஆற்றினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் தங்களுடைய கோரிக்கைகள் குறித்து அதன் நிர்வாகிகள் தெரிவிக்கையில், தமிழகத்தில் உள்ள இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட ஏழை எளிய திருமண அமைப்பாளர்களை தமிழக அரசின் அமைப்பு சாரா நல வாரியத்தில் சேர்க்க வேண்டும்,
60 வயதுக்கு மேற்பட்ட ஏழை திருமணம் அமைப்பாளர்களுக்கு பென்சன் வழங்க வேண்டும், தொழில் அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும், இலவச பஸ் பாஸ் அடையாள அட்டை வழங்க வேண்டும், பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் இலவச வீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக அரசிற்கு முன்வைத்தனர்.
Comments
Post a Comment