50 பயனாளிகளுக்கு பிரதமர் இலவச உஜ்வாலா கேஸ் இணைப்பு வழங்கிய பாஜக மாவட்ட மகளிர் அணி துணைத்தலைவர் ராஜ தமயந்தி
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக மகளிரணி சார்பில் பாரதப்பிரதமர் இலவச உஜ்வாலா கேஸ் இணைப்பு வழங்கும் நிகழ்ச்சி
திருவண்ணாமலை தென்றல் நகரில் உள்ள கௌதம் எச்பி கேஸ் ஏஜென்சி அருகில் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக மகளிரணி சார்பில் பாரதப்பிரதமர் இலவச உஜ்வாலா கேஸ் இணைப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் இலவச உஜ்வாலா கேஸ் இணைப்பு திட்டத்தின் மூலம் இலவச கேஸ் சிலிண்டர்,
அடுப்பு, ரெகுலேட்டர் உள்ளிட்டவற்றை திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக மகளிர் அணி துணைத் தலைவர் ராஜதமயந்தி தலைமையில் மொத்தம் 50 பயனாளிகளுக்கு வழங்கினார்.
வடக்கு ஒன்றிய மகளிரணித் தலைவர் அலமேலு, ஒன்றிய செயலாளர் தேவகி, தண்டராம்பட்டு கிழக்கு ஒன்றிய மகளிர் அணி தலைவர் ராஜலட்சுமி முன்னிலையில் கேஸ் சிலிண்டர்கள் வினியோகிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக வடக்கு ஒன்றிய பொதுச் செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ஏ.ஆர்.விஜய் , மாவட்ட இளைஞரணி பொதுச்செயலாளர் பி.மூவேந்தன், செந்தில்வேல், மாவட்ட தமிழ் வளர்ச்சிப் பிரிவு செயலாளர் எஸ்.ஆர்.செல்வம் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இலவச கேஸ் இணைப்பு பெற்ற அனைத்து மகளிரும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல்.முருகன், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆகியோருக்கு தங்களின் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.
Comments
Post a Comment