சு.பொலக்குனம் கிராமத்தில் மகளிர் உரிமைத் தொகை பெற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் கலந்து கொண்டு மனுக்களை அளித்தனர்
திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் வட்டம், சு.பொலக்குனம் கிராமத்தில் உள்ள அம்மன் கோயில் மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. முகாமில் ஆரஞ்சு கலிங்கேரி சு.பொலக்குனம் கிராம பகுதி மக்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முகாமில் கலந்து கொண்டு பட்டா மாற்றுதல். முதியோர் உதவித்தொகை. விதவை உதவித்தொகை. மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களை அரசு அதிகாரிகள் பொதுமக்களிடமிருந்து பெற்றுக் கொண்டனர். மேலும் முகாமில் இலவசமாக மருத்துவம் பரிசோதனை நடைபெற்றது இதில் முதியவர்கள் இலவசமாக மருத்துவ சிகிச்சை பெற்றுக் கொண்டனர். இம்முகாமில் சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். ஒன்றிய செயலாளர் ஆரஞ்சு ஆறுமுகம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் அரசு அலுவலர்கள் முகாமில் கொண்டனர்