முன்னாள் முதல்வர் காமராஜர் அவர்களின் 123 ஆவது பிறந்தநாள் விழா, கல்வி வளர்ச்சி நாள் மற்றும் விருது வழங்கும் விழாவாக நடைபெற்றது
திருவண்ணாமலை நகரின் செட்டி தெருவில் உள்ள உண்ணாமலை திருமண மண்டபத்தில் பேர்ட்ஸ் தோண்டு நிறுவனம் மற்றும் ரோட்டரி கிளப் திருவண்ணாமலை வேகம் இணைந்து நடத்திய முன்னாள் முதல்வர் காமராஜர் அவர்களின் 123 ஆவது பிறந்தநாள் விழா, கல்வி வளர்ச்சி நாள் மற்றும் விருது வழங்கும் விழாவாக நடைபெற்றது
மாவட்ட மைய நூலக வாசகர் வட்ட தலைவர் அ.வாசுதேவன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். உலக திருக்குறள் கூட்டமைப்பின் அறக்கட்டளை தலைவர் தமிழரிமா தா.சம்பத் முன்னிலை வகித்தார்.
மகரிஷி வித்யா மந்திர் பள்ளியின் முதல்வர் அனிதா ராம், முனைவர் சு.ஜனசக்தி ஞானவேல், முதுகலை தமிழ் ஆசிரியர் கி.கயல்விழி, முதுகலை ஆசிரியர் சா.சங்கீதா உள்ளிட்டோர் நிகழ்ச்சியை குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர்.
ரோட்டரி சங்க தலைவர் ஜே பி சேத்தன் செயலாளர் பிடிஎஸ் வி தீபக்குமார் பொருளாளர் எஸ் அம்ரித் குமார் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு இருபத்தைந்துக்கும் மேற்பட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த கல்விப் பணியாற்றும் சான்றோர்களுக்கு காமராஜர் பெயரில் விருது வழங்கி சிறப்பித்தார்கள்.
திருக்குறள் தொண்டு மையம் தலைவர் பாவலர் ப.குப்பன், புயல்மொழி ம.கோவிந்தசாமி, முதுகலை ஆசிரியர் கா.பூவனக்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
மாவட்டத்தின் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ மாணவியர்களுக்கு ஓவியம் பேச்சு கட்டுரை உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன
நிறைவாக தொண்டு நிறுவனத் தலைவர் ச.பாலசுப்பிரமணியன் நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி கூறினார்.





Comments
Post a Comment