பலமுறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை 2வது முறையாக மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் செய்வதாக பாதிக்கப்பட்ட ஜோதி பேட்டி
திருவண்ணாமலை அறிவொளி பூங்கா அருகில் திருவண்ணாமலை அடுத்து வள்ளிவாகை கிராமத்தை சேர்ந்த ஜோதி என்பவருக்கு சொந்தமான 5 ஏக்ர் 10 சென்ட் நிலத்தை அதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணி, ரேணுகாம்பாள், பொன்னுசாமி உள்ளிட்ட நபர்கள் நிலத்தை அபகரித்துக் கொண்டார்கள்.
அந்த நிலத்தை மீட்டுக் கொடுக்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பலமுறை மனுக்கள் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, எனவே மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து இரண்டாவது முறையாக நாங்கள் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் செய்திருக்கிறோம் என ஜோதி என்பவர் தெரிவித்தார்.
எனவே மாவட்ட நிர்வாகம் எங்களது நிலத்தை மீட்டுக் கொடுக்கவில்லை என்றால் எங்களது குடும்பத்துடன் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வோம் என ஜோதி தெரிவித்தார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. எனவே எங்களது தற்கொலைக்கு மாவட்ட நிர்வாகம் தான் காரணம் எனவும் தெரிவித்தார்.



Comments
Post a Comment