திருவண்ணாமலை மாதவி பன்னீர்செல்வம் திருமண மண்டபத்தில் கடந்த 2 நாட்கள் திருவண்ணாமலை திருப்பெருந்துறை அடியார்கள் குழு, தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையம் சார்பில் உலக நன்மைக்காக 4000க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற தெய்வீக திருவாசக மாநாடு நடைபெற்றது.
திருவண்ணாமலை திருப்பெருந்துறை அடியார்கள் குழு நிறுவனத் தலைவர் திருவாசகத் தென்றல் மா.சிவக்குமார், அகில பாரத சன்னியாசிகள் சங்க பொருளாளர் சிவத்திரு சிவராமானந்தா சுவாமிகள் ஆகியோர் ஏற்பாட்டில் திருவாசகம் எழுதியவர்களுக்கு சான்று வழங்கப்பட்டது.
சிவவாதியம் முழங்க சிவனடியார்கள் பங்கேற்ற பேரணி நடைபெற்றது.
திருவண்ணாமலை தண்டராம்பட்டு சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் 2 நாட்கள் திருவாசக மாநாடு நடைபெற்றது. இன்று காலை தேனிமலை குப்பச்சி விநாயகர் கோயிலில் இருந்து,
தேனி மாவட்டம் திருமுடி சுமக்கும் சிவனடியார்கள் சார்பில் 51 நடராஜர் சிலைகளுடன் வெகு விமர்சியாக ஊர்வலம் நடைபெற்றது.
திருவாசகத்தை முற்றும் எழுதிய சிவனடியார்களுக்கு சான்றிதழ் வழங்கி ஆதீனங்கள் மடாதிபதிகள் ஆன்மீகப் பெருமக்கள் ஆசியுரை மற்றும் வாழ்த்துரை வழங்கினார்கள்.
நிகழ்வில் கலந்து கொண்ட தவத்திரு பாலமுருகன் அடிமை சுவாமிகள் ரத்தினகிரி அகில பாரதிய சன்யாசிகள் சங்க நிறுவனர் தவத்திரு ராமானந்த மகராஜ் அவர்கள் தவத்திரு சிவாக்கர தேசிக சுவாமிகள் முருகக்கவி பிரம்மஞானி சிவ நேய செல்வர் சிவத்திரு சே ராஜேந்திரன் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி, விஐடி துணைவேந்தர் ஜிவி செல்வம், சுவாமி சிவராமானந்தா அகில பாரதிய சன்னியாசிகள் சங்க பொருளாளர், ஸ்ரீ முருகா குரூப்ஸ் திருவண்ணாமலை டி எஸ் எம் பன்னீர்செல்வம், மாதவி பன்னீர்செல்வம் மஹால் உரிமையாளர் எஸ் பன்னீர்செல்வம், ஜோதிட திலகம் ஆரணி ஜோதிட திலகம் சிவஸ்ரீ இரா குமரேசன், பேராசிரியர் முனைவர் மகாலட்சுமி, காமாட்சிபுரி ஆதீனம் நிலையூர் ஆதீனம் ராணிப்பேட்டை மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் கே லட்சுமணன் அய்யா ஆகியோர் கலந்து கொண்டனர்.
வரவேற்புரை ஜீவா ஸ்ரீனிவாசன் கடலூர், சுப்பிரமணிய முனியாண்டி டி இராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நன்றியுரை குப்புசாமி செயலாளர் அப்பர் சுவாமிகள் மடம்.
திருப்பெருந்துறை அடியார்கள் குழு உறுப்பினர்கள் மற்றும் தடம் பதிக்கும் தள்ளர்கள் பன்னாட்டு மையம் சார்பில் உறுப்பினர்கள் திவ்யஸ்ரீ நிறுவனர் தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மைய தலைமையில் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.







Comments
Post a Comment