500 மாணவர்கள் பயிலும் பள்ளி அருகில் துர்நாற்றத்துடன் வாயுக்கள் வெளியேறி ஆபத்து விளைவிக்கக் கூடிய தீவனங்களை ஏற்றி இறக்கும் அவலம், மாணவர்களுக்கு ஆபத்து ஏற்படும் முன் மாவட்ட நிர்வாகம் தடுத்து நிறுத்த மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை
திருவண்ணாமலை அடுத்த கீழ்நாச்சிபட்டு புதிய பைபாஸ் சாலை அருகே 500க்கும் மேற்பட்ட பள்ளி மாணவச் செல்வங்கள் பயிலும் தனியார் கல்வி நிறுவனங்கள் உள்ளது. இந்தக் கல்வி நிறுவனங்களில் சிறார்கள் குழந்தைகள் கல்லூரி மாணவர்கள் என ஏராளமானவர்கள் பயின்று வருகின்றனர். அத்துடன் அரசு அலுவலர்கள் பங்கேற்கும் திறன் பயிற்சி முகாம்களும் இங்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் ஒவ்வொரு நாளும் எண்ணற்ற கனரக வாகனங்கள் துர்நாற்றம் வீசக்கூடிய மாட்டு தீவனங்களை ஏற்றிக்கொண்டு பள்ளிக்கு அருகாமையில் வந்து நின்று வேறு வாகனங்களில் பரிமாறி செல்கின்றனர்.
சிறு குழந்தைகள் பயிலக்கூடிய கல்விச்சாலைகளுக்கு அருகே விச வாயுக்கள் வெளியேறக்கூடிய, துர்நாற்றம் வீசக்கூடிய மாட்டு தீவனங்கள் வாகனங்களில் ஏற்றி வந்து மற்ற வாகனங்களுக்கு ஏற்றி செல்கின்றனர்.
இதனால் பள்ளி வளாகத்தை சுற்றி துர்நாற்றம் வீசுவதால் பள்ளி குழந்தைகளுக்கு மூச்சு திணறல் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்படுவதாக பள்ளி மாணவர்களும் பெற்றோர்களும் ஆசிரியர்களும் புகார் தெரிவிக்கின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏற்கனவே பள்ளிக்கு அருகில் துர்நாற்றம் வீசக்கூடிய வாயுக்கள் வெளியேறியதால் மாணவர்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர் . அதுபோல் மீண்டும் கீழ்நாச்சிப்பட்டு தனியார் பள்ளி வளாகம் மிக அருகே துர்நாற்றம் வீசக்கூடிய வாயுகள் வெளியேறக்கூடிய மாட்டு தீவனங்களை எண்ணற்ற கனரக வாகனங்கள் மூலம் ஏற்றியும் இறக்கியும் பள்ளி மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் ஆபத்து ஏற்படும் வகையில் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இதனை மாவட்ட நிர்வாகம் உடனடியாக தடுத்து நிறுத்தி பள்ளி வளாகத்தின் அருகில் இவ்வாறு செயல்படுவதற்கு கனரக வாகன உரிமையாளர்கள், மாட்டு தீவனம் ஏற்றி செல்பவர்களுக்கு மாவட்ட ஆட்சியரும், மாவட்ட நிர்வாகமும் உடனடியாக தடை விதித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.



Comments
Post a Comment