இந்தியாவிற்கே தெரிந்தவர் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் குமார், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர் பொன்.கிருஷ்ணமூர்த்தி புகழாரம்
தண்டராம்பட்டு மேற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் G.மோகன் பொதுக் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். திருவண்ணாமலை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் செங்கம் G.குமார் வழிகாட்டுதலின் பேரில் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை துறை தலைவர் ஜெயன்கான் பொதுக் கூட்ட நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பான முறையில் செய்திருந்தார்.
சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர் பொன்.கிருஷ்ணமூர்த்தி, சிறுபான்மை பிரிவு மாநில தலைவர் முகமது ஆரிப், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மேலிட பேச்சாளர் காஜா மைதீன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர் பொன்.கிருஷ்ணமூர்த்தி கூட்டத்தில் பேசுகையில் கூறியதாவது,
ராமா ராமா என்று சொன்ன காந்தியடிகள் ஒரு முஸ்லிம் வீட்டிற்கு சென்றார் அதன் மூலம் அப்போது நடைபெற்ற மாப்ளா கலவரம் நின்றது, மதச்சார்பின்மை என்ற ஒற்றைச் சொல்லில் காங்கிரஸ் திமுகவுடன் கூட்டணி வைத்துள்ளது
பண மதிப்பிழப்பு இந்திய பொருளாதாரத்தை சீர் அழித்து விடும் என்று ரகுராம்ராஜன் சொன்னார்கள் அதை கேட்கவில்லை, இன்றைக்கும் காந்தியை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை, ஏனென்றால் காந்தி என்பவருக்கு தான் எல்லா நாடுகளிலும் சிலை இருக்கிறது.
இந்தியா என்பது எல்லோருக்குமான நாடு என்று சர்ச்சிலிடம் விளக்கமாக எடுத்து சொன்னார், முஸ்லிம், கிறிஸ்தவர்கள், தலித் என்று பிரிப்பதற்கு ஜின்னாவை பயன்படுத்தி அம்பேத்கரை பயன்படுத்துகிறீர்கள் நான் ஒப்புக்கொள்ள மாட்டேன் என்று சொன்னவுடன் எழுந்து நின்று சல்யூட் அடித்தார் சர்ச்சில்.
ஏன் ஸ்டாலின் காங்கிரஸை உடன் வைத்திருக்கிறார், ராகுல் காந்தி பார்லிமெண்டில் எழுந்த உடனே மோடி அலறுகிறார் ராகுல் காந்தி பேசினால் பதில் சொல்ல முடியவில்லை, உலக வரலாற்றில் இந்திய நாட்டின் பார்லிமென்டை பார்த்து பயந்தார் என்று சொன்னால் இன்றைய பிரதமர் மோடி அவர்கள் தான். அதிமுக என்பது அமித்ஷா திமுகவாக மாறிவிட்டது
இந்திய தேசத்திற்கே தெரிந்தவர் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் குமார் என்று சொன்னது உண்மைதான், காங்கிரஸ்காரர் தவறு செய்ய மாட்டான் என்று நிரூபித்து விட்டு இங்கு மீண்டும் மாவட்ட தலைவராக வந்து அமர்ந்திருக்கிறார் குமார் என்று பொன் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.
இந்த பொது கூட்டத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர் காமராஜ், திருவண்ணாமலை நகரத் தலைவர் வெற்றிச்செல்வன், தானிப்பாடி நிர்வாகிகள் கார்த்தி ராஜா உள்ளிட்ட பொறுப்பாளர்கள் மாநில, மாவட்ட, வட்டார, நகர காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் காங்கிரஸ் பேரியியக்க தோழர்கள் 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.






Comments
Post a Comment