Skip to main content

Posts

Showing posts from February, 2025

ஆண்டு விழா கலை நிகழ்ச்சிகள், நடனம், இசை என முத்தமிழும் கலந்து சிறப்பான முறையில் நடைபெற்றது

  திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் வட்டம், ராஜந்தாங்கல் ஊராட்சி ஒன்றிய அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி ஆண்டு விழா கலை நிகழ்ச்சிகள், நடனம், இசை என முத்தமிழும் கலந்து சிறப்பான முறையில் நடைபெற்றது. நிகழ்ச்சியின் துவக்கமாக  கே.சந்திரசேகரன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரையும் வரவேற்று பேசினார். தலைமை ஆசிரியர் கே.பாரதி, பள்ளி மேலாண்மை குழு தலைவர் ஜெயபாரதி மணி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஆர்.அன்பழகன், எஸ் தட்சிணாமூர்த்தி, கோ.மணி, ஆர்.ஆறுமுகம், கே.சுகுமார், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் விகே.சீனிவாசன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். உதவி தலைமை ஆசிரியர் ஜி.ஷீலா, விழா தொகுப்பு ஆர்.ஜெயக்குமார் உள்ளிட்ட இருபால் ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் ஏராளமானோர் இந்த ஆண்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் மாணவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக நடனம் மற்றும் நாடகம் இசை என காண்போரை ஈர்க்கும் வகையில் அமைந்திருந்தது. தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்கள், சிறந்த தமிழ் ஆங்கில கையெழுத்து, விடுப்பு இன்றி பள்ளியில் கலந்து கொண்ட மாணவர்கள், ஓவ...

இருமொழி கொள்கையை பின்பற்றியதால் தான் தமிழர்கள் உலகெங்கும் தலைமை பொறுப்புகளில் பணியாற்றுகின்றனர், துணைத் சபாநாயகர் கு.பிச்சாண்டி பேச்சு

  திருவண்ணாமலை வேங்கிக்காலில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருவண்ணாமலை மாவட்ட தமிழ் சங்கம் சார்பில் உலகத் தமிழ் மொழி நாள் முன்னிட்டு கவியரங்கம், கருத்தரங்கம், மாணவர்களுக்கு பரிசளிப்பு என முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டது. உலகத் தமிழ்மொழி நாள் முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகள் தமிழின் சிறப்பு குறித்து அருமையாக பேசினர். பள்ளி மாணவி உலகத் தாய்மொழி குறித்து எண்ணற்ற திருக்குறளை சரளமாக கூறினர். மாவட்ட தமிழ் சங்க நிறுவனத் தலைவர், தமிழ் செம்மல் மதிப்புறு முனைவர் தமிழ் அரிமா பா.இந்திரராஜன் அவர்கள் தலைமையில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளித்து விழா பேருரை ஆற்றினார். அப்போது அவர் பேசுகையில் கூறியதாவது, இரு மொழி கொள்கையை பின்பற்றியதால் தான் தமிழர்கள் உலகம் முழுவதும் உள்ள சிறந்த நிறுவனங்களில் தலைமை பொறுப்புகளில் பணியமர்த்தப்படுகின்றனர், குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைக்க வேண்டும், தமிழில் திருமணம் செய்திட வேண்டும், விளம்பரங்களில் தமிழை முன்னிலைப்படுத்துதல் தமிழர்கள் நமது கடமை என்று தெரிவித்தார். தமிழன்னை விர...

1750 மாணவர்கள் பங்கேற்ற 46வது அகில இந்திய கராத்தே போட்டிகளில் சந்தானம் சிலம்ப அகாடமி மாணவர்கள் 10 பேர் முதல் பரிசு வென்று அசத்தல்

    இராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு G.N. தனியார் திருமண மண்டபத்தில் ஜப்பான் ஷிட்டோ ரியூ கராத்தே பள்ளி சார்பில் 46வது அகில இந்திய அளவிலான கராத்தே போட்டிகள் நடைபெற்றது.  இதில் கேரளா, கர்நாடக, ஆந்திரா, பாண்டிச்சேரி, தெலுங்கானா ஆகிய மாநில கராத்தே மாணவர்கள் கலந்து கொண்டனர். மேலும் தமிழகம் முழுவதும் 25 க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து 1750 கராத்தே பள்ளி பயிற்சி மாணவர்கள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.   இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் பிரசாந்த் தலைமை தாங்கினார். திருவண்ணாமலை மாவட்டத்தைச் சார்ந்த சந்தானம் தற்காப்புக் கலை அகாடமி மாணவர்கள் மாவட்ட தலைவர் ஷீகான் ச.சரவணன் MBA , MTech தலைமையில் 15 பேர் கலந்து கொண்டனர்.   இதில் முதல் பரிசு 10 மாணவர்களும், இரண்டாம் பரிசு 5 மாணவர்களும் கராத்தே போட்டிகளில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி பரிசு மற்றும் சான்றிதழ்களை தட்டிச் சென்றனர்.  போட்டிகளில் பங்கேற்று பரிசு மற்றும் சான்றிதழ்களை பெற்று திருவண்ணாமலை மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த மொத்தம் 15 மாணவர்களுக்கு ஆசான் ச.சரவணன் MBA, MTech வாழ்த்துக்களை...

2668 அடி உயர மலை உச்சியில் அருணாச்சலேஸ்வரர் அருளிய சிவலிங்கம் கேரளாவில் பிரதிஷ்டை செய்யப்பட்டு கார்த்திகை தீபம் ஏற்ற சிவலிங்கத்தை கிரிவலம் வந்து அனுப்பி வைத்த பட்டியல் அணி மாவட்ட தலைவர் ஆர்.விஜயராஜ்

  திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள 14 கிலோ மீட்டர் தொலைவு அருணாச்சலேஸ்வரர் அவதாரமான சிவன் பகவானின் சிலை திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக பட்டியல் அணி மாவட்ட தலைவரும், ஹிமாலய யாத்திரை குழு ஆர்எஸ்எஸ் மாநில செயலாளருமான ஆர்.விஜயராஜ் தலைமையில் மலையே சிவனாக வணங்கப்படும் 2668 அடி உயர மலை உச்சியில் இருந்து அண்ணாமலையார் அருளால் வடிவமைக்கப்பட்ட சிவலிங்க சிலை 14 கிலோமீட்டர் கிரிவலம் வந்து கேரள மாநிலம் பாலக்கோட்டில் உள்ள திருவில்வாமலையில் சித்தூர் வியாச பரமாத்மா மடத்தின் மடாதிபதி சத்குரு வியாசானந்த சிவயோகி சுவாமிகள் பிரதிஷ்டை செய்வதற்காக வழி அனுப்பி வைக்கப்பட்டது. திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கிரிவலமாக வந்து கேரள மாநிலம் பாலக்கோட்டில் உள்ள திருவில்வாமலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு திருவில்வாமலையிலும் 17 கிலோ மீட்டர் கிரிவலம் வந்து பகவான் அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் அவதாரமான சிவனின் சிலை சித்தூர் வியாச பரமாத்மா மடம் சத்குரு வியாசானந்த சிவயோகி அவர்களால் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. சித்தூர் வியாச பரமாத்மா மடத்தின் மடாதிபதி சத்குரு வியாசானந்த சிவயோகி சுவாமிகள் கடந்த 35 ஆண்டு காலமாக உலக நன்மை வேண...

State Secretary of CPI presented 2nd Annual Arts and Literature Awards

  The 2nd Annual Arts and Literature Awards Ceremony of the Advocate Mohan Social Welfare Council was held in Tiruvannamalai. At this event, the State Secretary of the Communist Party of India, Comrade R. Mutharasan, presented the awards and commended the awardees.  The President of the Advocate Mohan Social Welfare Council, Yuvaraj Ambedkar Mohan presided over the function. Advocate R.Dhanaraj delivered the welcome address. L.Mukil Dhammapriyan addressed the audience. Gautham Mohan, Deena Kannan, Thenpallipattu Chakravarthy, Tamilarasan, Tamil Nilavankuna were took lead in the meeting.. Ajith, Deepak, Vasanth, Kannan Nataraj, Koteeswaran and others coordinated the program.  The Lifetime Achievement Award was given to Comrade P. Anbu, State Deputy Secretary of the Tamil Nadu Art and Literature Forum , the Best Film Award was given to Parari Film Director Ezhil Periyavedi, the Best Actor Award was given to Parari Film Actor Premnath, The Literary Award to Writer K. Jaishan...

கலை இலக்கிய விருது விழாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் விருதுகளை வழங்கி பாராட்டினார்

  திருவண்ணாமலை திருக்கோவிலூர் சாலையில் உள்ள தனியார் மஹாலில் வழக்கறிஞர் மோகன் சமூக நலப்பேரவை தலைவர் வழக்கறிஞர் யுவராஜ் அம்பேத்கர் மோகன் தலைமையில் கலை இலக்கிய விருது விழா நடைபெற்றது.  மோகன் சமூக நல பேரவை சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் இரா.தனராசு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரையும் வரவேற்று பேசினார். பேரவையின் வழிகாட்டி இல.முகில் தம்மப்பிரியன் நோக்க உரையாற்றினார். சாந்தி மோகன், கௌதம் மோகன், தீனா கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் இரா.தங்கராஜ் நிகழ்ச்சியை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பல துறை கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கி கலைஞர்களை பாராட்டினார். தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற மாநில துணைச் செயலாளர் பெ.அன்பு வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றார்.  சிறந்த திரைப்படம் பராரி இயக்குனர் எழில்பெரியவேடி, சிறந்த நடிகர் பராரி திரைப்படம் நடிகர் பிரேம்நாத், சிறந்த எழுத்தாளர் க.ஜெய்சங்கர், சிறந்த புல்லாங்குழல் இசை கலைஞர் இரா பரணி, சிறந்த தெருக்கூத்து நா...

1350 மாணவர்கள் பங்கேற்ற கராத்தே, சிலம்ப போட்டிகளில் சந்தானம் சிலம்ப அகாடமி மாணவர்கள் 12 பேர் முதல் பரிசு வென்று அசத்தல்

   கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் தனியார் திருமண மண்டபத்தில் கல்லை கலைக்கூடம் சார்பில் மாநில அளவிலான சிலம்ப போட்டி மற்றும் கராத்தே போட்டிகள்  நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதும்  15க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து 1350 கராத்தே மற்றும் சிலம்ப பயிற்சி மாணவர்கள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.   இதில் சிறப்பு விருந்தினராக அர்ஜூனா விருது பெற்ற பாஸ்கர் ICF தலைமை தாங்கினார். திருவண்ணாமலை மாவட்டத்தைச் சார்ந்த சந்தானம் சிலம்பம் அகாடமி மாணவர்கள் சந்தானம் சிலம்பம் அகாடமி மாவட்ட தலைவர் ஆசான் ச.சரவணன் MBA MTech தலைமையில் 20 பேர் கலந்து கொண்டனர்.   இதில் முதல் பரிசு 12 மாணவர்களும், இரண்டாம் பரிசு 8 மாணவர்களும் கராத்தே மற்றும் சிலம்பப் போட்டிகளில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி பரிசு மற்றும் சான்றிதழ்களை  தட்டிச் சென்றனர்.  போட்டிகளில் பங்கேற்று பரிசு மற்றும் சான்றிதழ்களை பெற்று திருவண்ணாமலை மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த மொத்தம் 20 மாணவர்களுக்கு ஆசான் ச.சரவணன் MBA, MTech வாழ்த்துக்களை தெரிவித்தார்.  சங்கராபுரம் கராத்தே மணி நி...

1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஶ்ரீ வேடியப்பன் ஆலய மஹா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது....

  கும்பாபிஷேகம் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.... திருவண்ணாமலை மாநகரின் சகாய நகரில் எழுந்தருளியுள்ள 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ வேடியப்பன் கோவிலில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது, ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். அருள்மிகு வேடியப்பன் கோவிலில் கடந்த மூன்று தினங்களாக முதல் கால பூஜை, இரண்டாம் கால பூஜை, மூன்றாம் கால பூஜைகள் நடைபெற்ற நிலையில் இன்று அதிகாலை கோபூஜை மற்றும் நான்காம் கால பூஜைகள் சீனிவாசன், கண்ணதாசன் தலைமையில் நடைபெற்றது. கும்பாபிஷேக திருவிழாவை முன்னின்று ஒருங்கிணைந்தவர் பாஜக எஸ்.சி அணி மாவட்ட தலைவர் விஜயராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.  இதனை தொடர்ந்து யாக சாலையில் இருந்து கலசங்கள் புறப்பட்டு கோவிலை சுற்றி வந்து கோபுர உச்சியில் அமைந்துள்ள கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் ஆனது வெகு விமர்சையாக நடைபெற்றது, தொடர்ந்து சிவாச்சாரியார்கள் கோவிலின் உட்பிரகாரத்தில் 20 அடி உயரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வேடியப்பன் சுவாமிக்கு புனிதநீ...

500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம்

  திருவண்ணாமலை வேங்கிக்காலில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம், திருவண்ணாமலை மாவட்ட தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கத்தின் திருவண்ணாமலை மாவட்ட தலைவர் வி.எம்.நேரு தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் நிறுவனர், மாநிலத் தலைவர் பி.டி.அரசகுமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில் கூறியதாவது,   தனியார் பள்ளிகள் எதிர்கொண்டுள்ள சவால்கள், ஒவ்வொரு நாளும் பள்ளிகள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சனைகள், அவற்றிற்கு இந்த சங்கம் எவ்வாறு உதவும், மேலும் இந்த சங்கத்தை ஒருங்கிணைத்து எவ்வாறு சிறப்பாக செயல்படுத்துவது என்பது குறித்து கூட்டத்தில் பி.டி.அரசகுமார் பேசினார் திருவண்ணாமலை அனைத்து தனியார் பள்ளிகளின் நிர்வாகிகள், முதல்வர்கள், அனைத்து மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர். முன்னதாக தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் மாவட்ட அலுவலகம் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் திருவண்ணாமலை அண்ணா நுழைவாயிலில்...

புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட தலைவர் அவர்களுக்கு 'கவி' மாலை

  தொண்டுகள். செய்ய வந்தவரே!  சேவைகள்   நூறு செய்தவரே சோதனை தாண்டி வந்தவரே!!!. சாதனை படைக்கும் வல்லவரே!!. தன்னலமற்ற தூயவரே!!    தர்மத்தின் வழியில் செல்பவரே!!..      தரணி புகழும்  அருணையில் வந்தவரே!!  தன்னடக்கம் உள்ள சிறந்தவரே!! கடமையே கதியென செய்தவரே!!  காற்றும்புழலும் கடந்தவரே!!   கல்லும் முள்ளும் மிதித்தவரே!!  கட்சியின் கண்ணியம் தவறாமல் நடப்பவரே!! கட்டுமரமா மிதப்பவரே!!  கட்சியில் அனைவரையும் சுமப்பவரே!!  கட்டுப்பாடு அறிந்தவரே!!  களவும் முற்றிலும் அகற்றுபவரே!!  கஷ்டத்தை தாண்டி வந்தவரே!!!      காஞ்சி உண்ணாமலை பாளையத்தில் பிறந்தவரே!!   கடவுள் அண்ணாமலையாரின் அருள் பெற்றவரே!! கடக்கும் பாதை வெற்றி அடைய வேண்டுகிறேன்.... என்றும் தேசப்பணியில் கவிஞர் அ.தங்கராஜி எம்.ஏ, ஒன்றிய தலைவர் துரிஞ்சாபுரம் கிழக்கு ஒன்றியம்🙏🙏🙏💐💐

புதிய பாஜக மாவட்ட தலைவருக்கு மாலை அணிவித்து, பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு

  திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக, துரிஞ்சாபுரம் கிழக்கு ஒன்றியம், நூக்காம்பாடி கிராமத்தில் உள்ள முருகன் கோயில் அருகே புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாவட்டத் தலைவர் K.ரமேஷ் அவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி ஒன்றியத் தலைவர் கவிஞர் அ.தங்கராஜி எம்.ஏ தலைமையில் நடைபெற்றது.   இதில் கிருஷ்ணமூர்த்தி, டாக்டர் ராஜா ஹரி கோவிந்தன், வீரப்பன், பாலாஜி, பிரபாகரன், பி.பெருமாள், எஸ்.விஜயகுமார், சக்திவேல், சிவா, கார்த்தி, கண்ணன், அசோகன், பிரகாஷ், துரை,  ஏழுமலை, கே.ராமன், சண்முகம்,E.ராஜிவுகாந்தி உள்ளிட்ட பாஜக மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் ஏராளமானோர் மாவட்டத் தலைவரை வரவேற்று ஆளுயர தாமரை மலர் மாலை அணிவித்து, பொன்னாடை போர்த்தி, பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி சிறப்பான முறையில் வரவேற்பு அளித்து கொண்டாடினர். நூக்காம்பாடி கிராமத்தில் உள்ள சக்தி வாய்ந்த முருகன் கோவிலில் சிறப்பு அர்ச்சனை செய்து மாவட்ட தலைவருக்கு கோயில் அர்ச்சகர் பிரசாதம் வழங்கி வாழ்த்தினார். மாவட்டத் தலைவருக்கு கட்சி நிர்வாகிகள் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தனர். அனைத்து நிர்வாகிகளுக்கும் மாவட்ட தலைவர் பொன்னாடை போர்த்தி சிறப்பாக ...