திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக, துரிஞ்சாபுரம் கிழக்கு ஒன்றியம், நூக்காம்பாடி கிராமத்தில் உள்ள முருகன் கோயில் அருகே புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாவட்டத் தலைவர் K.ரமேஷ் அவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி ஒன்றியத் தலைவர் கவிஞர் அ.தங்கராஜி எம்.ஏ தலைமையில் நடைபெற்றது.
இதில் கிருஷ்ணமூர்த்தி, டாக்டர் ராஜா ஹரி கோவிந்தன், வீரப்பன், பாலாஜி, பிரபாகரன், பி.பெருமாள், எஸ்.விஜயகுமார், சக்திவேல், சிவா, கார்த்தி, கண்ணன், அசோகன், பிரகாஷ், துரை, ஏழுமலை, கே.ராமன், சண்முகம்,E.ராஜிவுகாந்தி உள்ளிட்ட பாஜக மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் ஏராளமானோர் மாவட்டத் தலைவரை வரவேற்று ஆளுயர தாமரை மலர் மாலை அணிவித்து, பொன்னாடை போர்த்தி, பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி சிறப்பான முறையில் வரவேற்பு அளித்து கொண்டாடினர்.
நூக்காம்பாடி கிராமத்தில் உள்ள சக்தி வாய்ந்த முருகன் கோவிலில் சிறப்பு அர்ச்சனை செய்து மாவட்ட தலைவருக்கு கோயில் அர்ச்சகர் பிரசாதம் வழங்கி வாழ்த்தினார். மாவட்டத் தலைவருக்கு கட்சி நிர்வாகிகள் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தனர். அனைத்து நிர்வாகிகளுக்கும் மாவட்ட தலைவர் பொன்னாடை போர்த்தி சிறப்பாக செயல்படுமாறு தெரிவித்தார்.
பூத் அளவில் பாஜக நிர்வாகிகள் வெற்றி பெறுவதற்கு என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்து மாவட்ட தலைவர் K.ரமேஷ் நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
மேலும் நூக்காம்பாடி கிராமத்தில் 15 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டு திறந்தும் பயனில்லாமல் தொடர்ந்து மூடப்பட்டு செடி, கொடிகள், மரம் புதர் போல் வளர்ந்து யாருக்கும் பயன்படாத மகளிர் சுகாதார வளாகத்தை நேரில் சென்று ஆய்வு செய்த அவர் அதனை மீண்டும் திறந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுப்பதற்கான வழிமுறைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு ஒன்றியத் தலைவர் கவிஞர் அ.தங்கராஜி எம்.ஏ அவர்களுக்கு வழி காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.





Comments
Post a Comment