கலை இலக்கிய விருது விழாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் விருதுகளை வழங்கி பாராட்டினார்
திருவண்ணாமலை திருக்கோவிலூர் சாலையில் உள்ள தனியார் மஹாலில் வழக்கறிஞர் மோகன் சமூக நலப்பேரவை தலைவர் வழக்கறிஞர் யுவராஜ் அம்பேத்கர் மோகன் தலைமையில் கலை இலக்கிய விருது விழா நடைபெற்றது.
மோகன் சமூக நல பேரவை சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் இரா.தனராசு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரையும் வரவேற்று பேசினார். பேரவையின் வழிகாட்டி இல.முகில் தம்மப்பிரியன் நோக்க உரையாற்றினார். சாந்தி மோகன், கௌதம் மோகன், தீனா கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் இரா.தங்கராஜ் நிகழ்ச்சியை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பல துறை கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கி கலைஞர்களை பாராட்டினார்.
தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற மாநில துணைச் செயலாளர் பெ.அன்பு வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றார்.
சிறந்த திரைப்படம் பராரி இயக்குனர் எழில்பெரியவேடி, சிறந்த நடிகர் பராரி திரைப்படம் நடிகர் பிரேம்நாத், சிறந்த எழுத்தாளர் க.ஜெய்சங்கர், சிறந்த புல்லாங்குழல் இசை கலைஞர் இரா பரணி, சிறந்த தெருக்கூத்து நாடக ஆசிரியர் சா.முத்து உள்ளிட்டோருக்கு கலை இலக்கிய விருதுகள் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.





Comments
Post a Comment