1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஶ்ரீ வேடியப்பன் ஆலய மஹா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது....
கும்பாபிஷேகம் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்....
திருவண்ணாமலை மாநகரின் சகாய நகரில் எழுந்தருளியுள்ள 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ வேடியப்பன் கோவிலில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது, ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.
அருள்மிகு வேடியப்பன் கோவிலில் கடந்த மூன்று தினங்களாக முதல் கால பூஜை, இரண்டாம் கால பூஜை, மூன்றாம் கால பூஜைகள் நடைபெற்ற நிலையில் இன்று அதிகாலை கோபூஜை மற்றும் நான்காம் கால பூஜைகள் சீனிவாசன், கண்ணதாசன் தலைமையில் நடைபெற்றது. கும்பாபிஷேக திருவிழாவை முன்னின்று ஒருங்கிணைந்தவர் பாஜக எஸ்.சி அணி மாவட்ட தலைவர் விஜயராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை தொடர்ந்து யாக சாலையில் இருந்து கலசங்கள் புறப்பட்டு கோவிலை சுற்றி வந்து கோபுர உச்சியில் அமைந்துள்ள கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் ஆனது வெகு விமர்சையாக நடைபெற்றது, தொடர்ந்து சிவாச்சாரியார்கள் கோவிலின் உட்பிரகாரத்தில் 20 அடி உயரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வேடியப்பன் சுவாமிக்கு புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது,
ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா கோவிந்தா என பக்தி முழக்கமெட்டு சுவாமியை வழிபட்டனர், திருக்கோயில் சார்பாக பக்தர்கள் அன்னதானம் வழங்கப்பட்டது.
மாரிசன், வடிவேல், சக்திவேல், கோவிந்தராஜ், பொன்னுரங்கம் சுப்பிரமணி, கண்ணதாசன், வெங்கடேசன், மகா சரவணன், முரளி, திருநாவுக்கரசு, ராமலிங்கம், ஜேம்ஸ், சுந்தரேசன், நாராயணமூர்த்தி, பூபாலகிருஷ்ணன் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கும்பாபிஷேகத்தை கண்டுகளித்து வேடியப்பன் சாமியின் அருளைப் பெற்றனர்.

Comments
Post a Comment