1750 மாணவர்கள் பங்கேற்ற 46வது அகில இந்திய கராத்தே போட்டிகளில் சந்தானம் சிலம்ப அகாடமி மாணவர்கள் 10 பேர் முதல் பரிசு வென்று அசத்தல்
இராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு G.N. தனியார் திருமண மண்டபத்தில் ஜப்பான் ஷிட்டோ ரியூ கராத்தே பள்ளி சார்பில் 46வது அகில இந்திய அளவிலான கராத்தே போட்டிகள் நடைபெற்றது.
இதில் கேரளா, கர்நாடக, ஆந்திரா, பாண்டிச்சேரி, தெலுங்கானா ஆகிய மாநில கராத்தே மாணவர்கள் கலந்து கொண்டனர். மேலும் தமிழகம் முழுவதும் 25 க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து 1750 கராத்தே பள்ளி பயிற்சி மாணவர்கள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் பிரசாந்த் தலைமை தாங்கினார். திருவண்ணாமலை மாவட்டத்தைச் சார்ந்த சந்தானம் தற்காப்புக் கலை அகாடமி மாணவர்கள் மாவட்ட தலைவர் ஷீகான் ச.சரவணன் MBA , MTech தலைமையில் 15 பேர் கலந்து கொண்டனர்.
இதில் முதல் பரிசு 10 மாணவர்களும், இரண்டாம் பரிசு 5 மாணவர்களும் கராத்தே போட்டிகளில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி பரிசு மற்றும் சான்றிதழ்களை தட்டிச் சென்றனர்.
போட்டிகளில் பங்கேற்று பரிசு மற்றும் சான்றிதழ்களை பெற்று திருவண்ணாமலை மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த மொத்தம் 15 மாணவர்களுக்கு ஆசான் ச.சரவணன் MBA, MTech வாழ்த்துக்களை தெரிவித்தார். வேலூர் கியோஷி A. ரமேஷ் பாபு நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தார்.





Comments
Post a Comment