1350 மாணவர்கள் பங்கேற்ற கராத்தே, சிலம்ப போட்டிகளில் சந்தானம் சிலம்ப அகாடமி மாணவர்கள் 12 பேர் முதல் பரிசு வென்று அசத்தல்
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் தனியார் திருமண மண்டபத்தில் கல்லை கலைக்கூடம் சார்பில் மாநில அளவிலான சிலம்ப போட்டி மற்றும் கராத்தே போட்டிகள் நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதும் 15க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து 1350 கராத்தே மற்றும் சிலம்ப பயிற்சி மாணவர்கள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
இதில் சிறப்பு விருந்தினராக அர்ஜூனா விருது பெற்ற பாஸ்கர் ICF தலைமை தாங்கினார். திருவண்ணாமலை மாவட்டத்தைச் சார்ந்த சந்தானம் சிலம்பம் அகாடமி மாணவர்கள் சந்தானம் சிலம்பம் அகாடமி மாவட்ட தலைவர் ஆசான் ச.சரவணன் MBA MTech தலைமையில் 20 பேர் கலந்து கொண்டனர்.
இதில் முதல் பரிசு 12 மாணவர்களும், இரண்டாம் பரிசு 8 மாணவர்களும் கராத்தே மற்றும் சிலம்பப் போட்டிகளில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி பரிசு மற்றும் சான்றிதழ்களை தட்டிச் சென்றனர்.
போட்டிகளில் பங்கேற்று பரிசு மற்றும் சான்றிதழ்களை பெற்று திருவண்ணாமலை மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த மொத்தம் 20 மாணவர்களுக்கு ஆசான் ச.சரவணன் MBA, MTech வாழ்த்துக்களை தெரிவித்தார்.
சங்கராபுரம் கராத்தே மணி நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தார்.





Comments
Post a Comment