திருவண்ணாமலை வேங்கிக்காலில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம், திருவண்ணாமலை மாவட்ட தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கத்தின் திருவண்ணாமலை மாவட்ட தலைவர் வி.எம்.நேரு தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் நிறுவனர், மாநிலத் தலைவர் பி.டி.அரசகுமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில் கூறியதாவது,
தனியார் பள்ளிகள் எதிர்கொண்டுள்ள சவால்கள், ஒவ்வொரு நாளும் பள்ளிகள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சனைகள், அவற்றிற்கு இந்த சங்கம் எவ்வாறு உதவும், மேலும் இந்த சங்கத்தை ஒருங்கிணைத்து எவ்வாறு சிறப்பாக செயல்படுத்துவது என்பது குறித்து கூட்டத்தில் பி.டி.அரசகுமார் பேசினார்
திருவண்ணாமலை அனைத்து தனியார் பள்ளிகளின் நிர்வாகிகள், முதல்வர்கள், அனைத்து மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
முன்னதாக தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் மாவட்ட அலுவலகம் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் திருவண்ணாமலை அண்ணா நுழைவாயிலில் இருந்து பேரணியாக வந்து வேங்கிக்கால் தனியார் திருமண மண்டபத்தில் ஆலோசனைக் கூட்டத்தில் அனைவரும் கலந்து கொண்டனர்.

Comments
Post a Comment