திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் வட்டம், ராஜந்தாங்கல் ஊராட்சி ஒன்றிய அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி ஆண்டு விழா கலை நிகழ்ச்சிகள், நடனம், இசை என முத்தமிழும் கலந்து சிறப்பான முறையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியின் துவக்கமாக கே.சந்திரசேகரன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரையும் வரவேற்று பேசினார். தலைமை ஆசிரியர் கே.பாரதி, பள்ளி மேலாண்மை குழு தலைவர் ஜெயபாரதி மணி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஆர்.அன்பழகன், எஸ் தட்சிணாமூர்த்தி, கோ.மணி, ஆர்.ஆறுமுகம், கே.சுகுமார், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் விகே.சீனிவாசன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
உதவி தலைமை ஆசிரியர் ஜி.ஷீலா, விழா தொகுப்பு ஆர்.ஜெயக்குமார் உள்ளிட்ட இருபால் ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் ஏராளமானோர் இந்த ஆண்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் மாணவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக நடனம் மற்றும் நாடகம் இசை என காண்போரை ஈர்க்கும் வகையில் அமைந்திருந்தது.
தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்கள், சிறந்த தமிழ் ஆங்கில கையெழுத்து, விடுப்பு இன்றி பள்ளியில் கலந்து கொண்ட மாணவர்கள், ஓவியம், விளையாட்டு என பள்ளியில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகள் அனைவருக்கும் பள்ளியின் சார்பில் பரிசுகள் வழங்கி பாராட்டப்பட்டது.
இறுதியாக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் எஸ்.பரமேஸ்வரி நன்றி கூறினார்

Comments
Post a Comment