2668 அடி உயர மலை உச்சியில் அருணாச்சலேஸ்வரர் அருளிய சிவலிங்கம் கேரளாவில் பிரதிஷ்டை செய்யப்பட்டு கார்த்திகை தீபம் ஏற்ற சிவலிங்கத்தை கிரிவலம் வந்து அனுப்பி வைத்த பட்டியல் அணி மாவட்ட தலைவர் ஆர்.விஜயராஜ்
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள 14 கிலோ மீட்டர் தொலைவு அருணாச்சலேஸ்வரர் அவதாரமான சிவன் பகவானின் சிலை திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக பட்டியல் அணி மாவட்ட தலைவரும், ஹிமாலய யாத்திரை குழு ஆர்எஸ்எஸ் மாநில செயலாளருமான ஆர்.விஜயராஜ் தலைமையில் மலையே சிவனாக வணங்கப்படும் 2668 அடி உயர மலை உச்சியில் இருந்து அண்ணாமலையார் அருளால் வடிவமைக்கப்பட்ட சிவலிங்க சிலை 14 கிலோமீட்டர் கிரிவலம் வந்து கேரள மாநிலம் பாலக்கோட்டில் உள்ள திருவில்வாமலையில் சித்தூர் வியாச பரமாத்மா மடத்தின் மடாதிபதி சத்குரு வியாசானந்த சிவயோகி சுவாமிகள் பிரதிஷ்டை செய்வதற்காக வழி அனுப்பி வைக்கப்பட்டது.
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கிரிவலமாக வந்து கேரள மாநிலம் பாலக்கோட்டில் உள்ள திருவில்வாமலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு திருவில்வாமலையிலும் 17 கிலோ மீட்டர் கிரிவலம் வந்து பகவான் அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் அவதாரமான சிவனின் சிலை சித்தூர் வியாச பரமாத்மா மடம் சத்குரு வியாசானந்த சிவயோகி அவர்களால் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.
சித்தூர் வியாச பரமாத்மா மடத்தின் மடாதிபதி சத்குரு வியாசானந்த சிவயோகி சுவாமிகள் கடந்த 35 ஆண்டு காலமாக உலக நன்மை வேண்டி யாக வேள்விகள் செய்து வருகிறார். சிவபுராணம், கந்தபுராணம், மார்க்கண்ட புராணம் இவை அனைத்தையும் எழுதியவர் வேத வியாசர். வேத வியாசர் இல்லையென்றால் கதையே இல்லை. வேத வியாசர் பகவானின் சிலையை தனது 14 வயதில் சத்குரு வியாசானந்த சிவயோகி சுவாமிகள் பிரதிஷ்டை செய்தவர். தென்னிந்தியாவில் பாலக்கோட்டடில் மட்டுமே வேத வியாசர் பகவானின் சிலை உள்ளது என்பது இந்த மடத்தின் சிறப்பாகும். இந்த மடத்தினுடைய மடாதிபதியாக சுவாமிகள் உள்ளார்.
உலக பிரசித்தி பெற்ற ஆன்மீக நகரான திருவண்ணாமலையில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் தீபம் ஏற்றுவது போல் கேரள மாநிலம் திருவில்வாமலையில் உலக மக்கள் நன்மை வேண்டி வரும் ஆண்டிலிருந்து கேரள மாநிலம் பாலக்கோட்டில் உள்ள கேரள மாநிலம் திருவில்வாமலையில் தீபம் ஏற்றப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
திருவண்ணாமலையில் கடந்த ஆண்டு சுவாமிக்கு சித்தூர் வியாச பரமாத்மா மடத்தின் மடாதிபதி சத்குரு வியாசானந்த சிவயோகி சுவாமிகள் ருத்ர யாகம் செய்த போது ஒரு தரிசனம் கிடைத்தது. அந்த யாகம் முடித்த போது அவருடைய மனதில் இதுபோல் தோன்றியது. கார்த்திகை தீபம் எரிவதைப் போல் அங்கிருந்து ஒரு சிலையை எடுத்து சிவலிங்கம் செய்து கொடுக்க வேண்டும் என்று மனதில் தோன்றியதால் ஒரு மாதத்திற்கு முன்பு திருவண்ணாமலை வந்து திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக பட்டியல் அணி மாவட்ட தலைவரும், ஹிமாலய யாத்திரை குழு ஆர்எஸ்எஸ் மாநில செயலாளருமான ஆர்.விஜயராஜ் அவர்களிடம் கோரிக்கை வைத்தவுடன் திருவண்ணாமலையிலிருந்து அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் வடிவில் ஒருவர் வந்து சிவலிங்கம் செய்ய பணித்துள்ளார். சுவாமி சிவலிங்க பகவான் சுவாமி சிலையானது திருவண்ணாமலை மலை மேல் உச்சியில் இருந்து அந்த விக்கிரகம் எடுத்துவரப்பட்டது. அவர் கேட்டது வேறு யாரும் வந்து அதைப் பெற்றுச் செல்லவில்லை. அருணாச்சலேஸ்வரர் வடிவில் அந்த ரூபத்தில் பகவானே வந்து வேண்டி அருள் பாலித்து சிவலிங்கத்தை வடித்து செய்து திருவண்ணாமலையார் செய்து கொடுத்துள்ளார். அதனை கேரளாவில் பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்று பணித்துள்ளார்.
திருவண்ணாமலையில் அண்ணாமலையார் 2668 உயர மலை உச்சியிலிருந்து கிடைக்கப்பெற்ற சிவலிங்க சிலையானது திருவண்ணாமலையில் இருந்து 14 கிலோமீட்டர் கிரிவலம் வந்து கேரள மாநிலம் பாலக்கோட்டில் உள்ள திருவில்வாமலைக்கு எடுத்துச் சென்று மடத்தில் மடாதிபதி தலைமையில் சிலையானது பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. அடுத்த ஆண்டு திருவண்ணாமலையில் திருக்கார்த்திகை தீபத்தன்று எப்படி தீபம் ஏற்றப்படுகிறதோ அன்று கேரள மாநிலம் பாலக்கோட்டில் உள்ள திருவில்வாமலையிலும் உலக நன்மைக்காக தீபம் ஏற்றப்பட உள்ளது என்று சுவாமிகள் தெரிவித்துள்ளார்.
சிவ வடிவமான அருணாச்சலேஸ்வரர் 2023ல் சுவாமியே திருவண்ணாமலைக்கு வர வேண்டும் என்று மடாதிபதிக்கு அழைப்பு விடுத்ததால் ஒரு மாதத்திற்கு முன்பாக திருவண்ணாமலைக்கு வந்து சிலையை செய்து உங்களுக்காக சுவாமியே வந்து அந்த சிலையை செய்யச் சொல்லி அந்த சிலையை திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக பட்டியல் அணி மாவட்ட தலைவரும், ஹிமாலய யாத்திரை குழு ஆர்எஸ்எஸ் மாநில செயலாளருமான ஆர்.விஜயராஜ் தலைமையில் அவர்கள் மூலமாக செய்யப்பட்டு திருவண்ணாமலையில் கிரிவலம் வந்து தற்போது எடுத்துச் செல்வதற்கு வழி அனுப்பி வைக்கப்பட்டது.
கடந்த 35 காலமாக ஆன்மீக பணியில் ஈடுபட்டு வரும் மடாதிபதி, வேத வியாசரின் சிலையை தென்னிந்தியாவில் பிரதிஷ்டை செய்தவர், சுவாமிகள் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. 14 கிலோமீட்டர் ஊர்வலமாக வந்து சிவலிங்க சுவாமிகள் திருவில்வாமலைக்கு வந்து 17 கிலோ மீட்டர் கிரிவலம் சிவலிங்கம் வர உள்ளது. அதற்குப் பிறகு மடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது
திருவண்ணாமலை மாவட்ட தேசிய அணி மாவட்ட தலைவர் தலைமையில் சிவலிங்க சிலை 14 கிலோமீட்டர் கிரிவலம் வந்து அவர் தலைமையில் கேரள மாநிலம் பாலக்காட்டுக்கு வழி அனுப்பி வைக்கப்பட்டது என்பது திருவண்ணாமலை மாவட்டத்திற்கு சிறப்பு சேர்க்கக் கூடிய அம்சமாகும்.









Comments
Post a Comment