இருமொழி கொள்கையை பின்பற்றியதால் தான் தமிழர்கள் உலகெங்கும் தலைமை பொறுப்புகளில் பணியாற்றுகின்றனர், துணைத் சபாநாயகர் கு.பிச்சாண்டி பேச்சு
திருவண்ணாமலை வேங்கிக்காலில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருவண்ணாமலை மாவட்ட தமிழ் சங்கம் சார்பில் உலகத் தமிழ் மொழி நாள் முன்னிட்டு கவியரங்கம், கருத்தரங்கம், மாணவர்களுக்கு பரிசளிப்பு என முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டது.
உலகத் தமிழ்மொழி நாள் முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகள் தமிழின் சிறப்பு குறித்து அருமையாக பேசினர். பள்ளி மாணவி உலகத் தாய்மொழி குறித்து எண்ணற்ற திருக்குறளை சரளமாக கூறினர்.
மாவட்ட தமிழ் சங்க நிறுவனத் தலைவர், தமிழ் செம்மல் மதிப்புறு முனைவர் தமிழ் அரிமா பா.இந்திரராஜன் அவர்கள் தலைமையில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளித்து விழா பேருரை ஆற்றினார்.
அப்போது அவர் பேசுகையில் கூறியதாவது, இரு மொழி கொள்கையை பின்பற்றியதால் தான் தமிழர்கள் உலகம் முழுவதும் உள்ள சிறந்த நிறுவனங்களில் தலைமை பொறுப்புகளில் பணியமர்த்தப்படுகின்றனர், குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைக்க வேண்டும், தமிழில் திருமணம் செய்திட வேண்டும், விளம்பரங்களில் தமிழை முன்னிலைப்படுத்துதல் தமிழர்கள் நமது கடமை என்று தெரிவித்தார்.
தமிழன்னை விருதாளர் தி.கு.செல்வமணி அவர்கள் திருக்குறள் ஒருவரி பொருள் நூலினை தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி அவர்களின் திருக்கரத்தால் தமிழ் அரிமா ப.இந்திரராஜன் அவர்கள் வழங்கினார்கள். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் திருக்குறள் இனிமைத்தேன் புத்தகத்தை நினைவு பரிசாக வழங்கப்பட்டது.
தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி உலகத் தாய்மொழி நாள் உறுதிமொழி நிகழ்ச்சியின் கலந்து கொண்ட அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
கவிஞர் தேவிகாராணி தலைமையில் தமிழே என் சுவாசமே என்ற தலைப்பில் கவியரங்கமும், தமிழ்ச்செல்வன் பாவலர் ப.குப்பன் தலைமையில் தமிழறிஞர்களின் பார்வையில் தமிழின் சிறப்பு என்ற தலைப்பில் கருத்தரங்கமும் சிறப்பான முறையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் ஏராளமான தமிழ் ஆசிரியர்களும் தமிழ் அறிஞர்களும் கலந்து கொண்டு கவிதையையும் சிறப்பான பேச்சையும் வெளிப்படுத்தி பார்வையாளர்களின் உள்ளங்களை வெகுவாக கவர்ந்தனர்.





Comments
Post a Comment