Skip to main content

Posts

Showing posts from August, 2022

"பி.கக்கன் வீர விருது" முதுகலை தமிழ் ஆசிரியர் அ.முருகையனுக்கு திண்டுக்கல் பசுமை வாசல் பவுண்டேஷன் வழங்கி கௌரவித்தது.

திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் அடுத்த அண்டம்பள்ளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் முதுகலை தமிழ் ஆசிரியராக அ.முருகையன் அவர்கள் பணியாற்றி வருகிறார்.  அவர் சிறப்பாக பணியாற்றியதை அங்கீகரிக்கும் விதமாக தமிழக அரசு அவருக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது கொடுத்து கவுரவ படுத்தியது. தொடர்ந்து அவர் இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழ் துறையிலும் அவரது சேவை சிறப்பாக இருந்து வருவதை அறிந்த திண்டுக்கல் பசுமை வாசல் பவுண்டேஷன்,குமரி மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்நாடு பனைமரம் காக்கும் பாதுகாப்பு இயக்கம், சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த ஸ்ரீ சக்சஸ் அகாடமி & பவுண்டேஷன், திருச்சிராப்பள்ளி வீரமங்கை சமூக சிந்தனை அறக்கட்டளை ஆகிய அமைப்புகள் இணைந்து தேசத்தின் வீர விருதுகள் 2022 "பி.கக்கன் வீர விருது" முதுகலை தமிழ் ஆசிரியர் அ.முருகையன் அவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் விருதினை வழங்கி பாராட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  "பி.கக்கன் வீர விருது" பெற்ற ஆசிரியரை தலைமை ஆசிரியர் உதவி தலைமை ஆசிரியர்கள், இருபால் ஆசிரியர்கள், ஊராட்சிமன்ற தலைவர், ஊர்பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் வாழ்த்துகளையும், ...

250 மாணவர்களுக்கு பேனா, நோட்டு, இனிப்பு வழங்கிய முத்து மாரியம்மன் ட்ரஸ்டின் நிர்வாக அறங்காவலர் முருகன் சுவாமிகள்

 திருவண்ணாமலை மாவட்டம் சு.பொலக்குணம் உயர்நிலைப் பள்ளியில் 75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தப்பட்டது. சென்ற ஆண்டு 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு டிக்சனரி வழங்கி, மேலும் 250 மாணவர்களுக்கு பேனா, நோட்டு, இனிப்பு உள்ளிட்டவற்றை முத்து மாரியம்மன் ட்ரஸ்டின் நிர்வாக அறங்காவலர் முருகன் சுவாமிகள் வழங்கி பாராட்டினார். திருவண்ணாமலை மாவட்டம் சு.பொலக்குணம் உயர்நிலைப் பள்ளியில் 75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா கொடி ஏற்றி மாணவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் குப்பு ஜெயக்குமார், துணைத் தலைவர், தலைமை ஆசிரியர் ஆசிரியர்கள் கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் சென்ற ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ மாணவிகளுக்கு டிக்சனரி முத்து மாரியம்மன் ட்ரஸ்டின் நிர்வாக அறங்காவலர் முருகன் சுவாமிகள் வழங்கினார். இன்று சுதந்திர தினம் கொண்டாடப்படுவதை ஒட்டி அனைத்து மாணவ மாணவிகளுக்கும் பேனா மற்றும் நோட்டு இலவசமாக வழங்கி நல்ல முறையில் படித்து முன்னே...

500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட 75வது சுதந்திர தின இருசக்கர வாகன பேரணி

 திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக இளைஞர் அணி சார்பில் 75வது சுதந்திர தினம் முன்னிட்டு தேசியக் கொடியுடன் 500க்கும் மேற்பட்ட இருசக்கர வாகன பேரணி இளைஞரணி மாவட்டத் தலைவர் சந்தோஷ் பரமசிவம் தலைமையில்,மாவட்ட தலைவர் ஜீவானந்தம் முன்னிலையில், மாநில பொதுச்செயலாளர் கார்த்தியாயினி, இளைஞர் அணி தேசிய செயலாளர் ஷாம் ராஜ், இளைஞரணி மாநிலத் தலைவர் ரமேஷ் சிவா உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக இளைஞர் அணி சார்பில், திருவண்ணாமலை அண்ணா நுழைவாயில் அருகே உள்ள ஈசானிய மைதானத்தில் இருந்து 75 ஆம் ஆண்டு சுதந்திர தினம் முன்னிட்டு தேசியக் கொடியுடன் 500க்கும் மேற்பட்ட இருசக்கர வாகன அணிவகுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் பேரணி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக பாஜக மாநில பொதுச்செயலாளர் திருமதி கார்த்தியாயினி , இளைஞர் அணி தேசிய செயலாளர் திரு. ஷாம் ராஜ், இளைஞரணி மாநிலத் தலைவர் திரு. ரமேஷ் சிவா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  திருவண்ணாமலை அண்ணா நுழைவாயில் அருகே உள்ள ஈசானிய மைதானத்தில் இருசக்கர வாகனி பேரணி துவங்கியது. அனைவரும் தங்கள் இருசக்கர வாகனங்...

ஓபிஎஸ் அணி தெற்கு மாவட்ட செயலாளர் தலைமையில் அண்ணா உள்ளிட்ட தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை.

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அதிமுக ஓபிஎஸ் அணி சார்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட பேரணி, ஓபிஎஸ் அணியில் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள மாவட்ட செயலாளர் பீரங்கி வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது. அதிமுக இரட்டை தலைமையின் கீழ் செயல்பட்டு வந்த நிலையில் தற்போது அதிமுகவில் ஒற்றை தலைமை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் நிலவிவரும் நிலையில் அதிமுகவினர் ஓபிஎஸ் அணி, ஈபிஎஸ் அணி என இரண்டு அணிகளாக செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் புதிதாக 24 மாவட்ட செயலாளர்களை நியமித்து அறிக்கை வெளியிட்டார்.  அதில் ஓபிஎஸ் அணியின் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அதிமுக செயலாளராக பீரங்கி வெங்கடேசன் அவர்களை நியமித்து அறிவிப்பு வெளியிட்டார். அதனை தொடர்ந்து ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அவர்களுக்கு நன்றி தெரிவித்தும், ஓபிஎஸ் அணியின் பலத்தை வெளிப்படுத்தும் வகையில் திருவண்ணாமலை திருக்கோவிலூர் சாலையில் அதிமுக ஓபிஎஸ் அணி தொண்டர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருடன் தெற்கு மாவட்ட செயலாளர் பீரங்கி வெங்கடேசன் பேரணியாக புறப்பட்டு சென்று நகரின் முக்கிய வீதிகள் வழியாக ...

பாஜக ஆன்மீகம் மற்றும் கோயில் மேம்பாட்டு பிரிவின் மாவட்ட செயலாளர் கே.அருணாச்சலம் அவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

திருவண்ணாமலை கிரிவலப்பாதை அடிஅண்ணாமலை ஊராட்சியை சேர்ந்த கே.அருணாச்சலம் அவர்களை பாஜகவின் ஆன்மீகம் மற்றும் கோயில் மேம்பாட்டு பிரிவின் மாவட்ட செயலாளராக திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக மாவட்ட தலைவர் R.ஜீவானந்தம் அவர்கள் நியமித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார். திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அருணாச்சலம் மகா அன்னதான மடம் மற்றும் நாகாத்தம்மன் திருக்கோயில் திருப்பணிகளை சிறப்பான முறையில் தொடர்ந்து அருணாச்சலம் அவர்கள் செய்து வருகிறார்.  பௌர்ணமி தினத்தன்று பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. ஆன்மீகப் பணிகளில் இவர் தொடர்ந்து பல ஆண்டு காலமாக சிறந்து செயல்பட்டு வருகிறார். 1972 ஆம் ஆண்டு முதல் கடந்த 50 ஆண்டு காலமாக ஆன்மீகப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். கிரிவலப் பாதையில் கடந்த 50 ஆண்டு காலமாக தனியார் வசம் இருந்த சந்திர லிங்கத்திற்கு சொந்தமான 53 சென்ட் நிலம் அருணாச்சலம் அவர்களின் தொடர் போராட்டத்தின் பலனாக இந்து சமய அறநிலையத்துறையின் வசம் ஒப்படைக்கப்பட்டது என்பது இவர் பணியின் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதன் எடுத்துக்காட்டாகும். இவர் இது போல் பல்வேறு பணிகளை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளார் என...

ராணுவ வீரர்கள் நலச்சங்கம் சார்பில் 23ம் ஆண்டு கார்கில் போர் வெற்றி விழா

திருவண்ணாமலை மாவட்டம், ஜமீன்கூடலூர் கிராமத்தில் உள்ள ஒருங்கிணைந்த ராணுவ வீரர்கள் நலச்சங்கம் சார்பில் 23ம் ஆண்டு கார்கில் போர் வெற்றி விழா,பாரத அன்னையின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். மாவட்ட தலைவர் பி.கருணாநிதி தலைமையேற்று சிறப்புரை. திருவண்ணாமலை மாவட்டம், ஜமீன்கூடலூர் கிராமத்தில் உள்ள முன்னாள் மற்றும் இந்நாள் ராணுவ சங்கத்தினர் ஒருங்கிணைந்து 23ம் ஆண்டு கார்கில் போர் வெற்றி விழாவை சிறப்பாக கொண்டாடினர். முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் பாரத அன்னையின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி பாரத் மாதா கீ ஜே என்ற கோஷத்துடன் சல்யூட் அடித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைந்த முன்னாள் மற்றும் இந்நாள் ராணுவ சங்கத் தலைவர் பி.கருணாநிதி அவர்கள் தலைமையேற்று சிறப்புரையாற்றினார்.  சங்கத்தின் மாவட்ட செயலாளர் சுபேதார் ஏ.சகாதேவன், மாவட்ட துணைத் தலைவர் கேப்டன் எல்.அந்துராஜ்,அவுல்தார் வேலு, சுபேதார் சம்பத், கேப்டன் பஷீர் அஹமத், அவுல்தார் என்.கே.பென்ஜமின், மாவட்டத் தலைவர்கள், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் க...

திருவண்ணாமலை நகரத் தலைவர் A.சகாதேவன் அவர்கள் தன்னுடைய பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு மாநிலத்தின் யாதவர் மகாசபை தலைவர் அய்யா நாசே ராமச்சந்திரன் அவர்களை சந்தித்து பிறந்த நாள் வாழ்த்துக்கள் பெற்றார்.

 தென்னிந்திய யாதவர் சங்கம் திருவண்ணாமலை நகரத் தலைவர் A.சகாதேவன் அவர்கள் தன்னுடைய பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு மாநிலத்தின் யாதவர் மகாசபை தலைவர் அய்யா நாசே ராமச்சந்திரன் அவர்களை சந்தித்து பிறந்த நாள் வாழ்த்துக்கள் பெற்றார்.மாவட்ட தலைவர் கமலக்கண்ணன், துணை தலைவர் கார்த்திக், செயலாளர் நாராயணன், துணை தலைவர் கலைச்செல்வன்,பொருளாளர் மற்றும் செட்டிப்பட்டி தொழில் அதிபர் அண்ணன் ராதாகிருஷ்ணன், அருண் குமார் ஒன்றிய செயலாளர் செங்கம், SRT வேலு மாவட்ட செயலாளர் S.மணி உள்ளிட்டோர் உடனிருந்தனர். A..சகாதேவன் அவர்கள் 06/08/1964 ஆம் ஆண்டு எரும்பூண்டி கிராமத்தில் பிறந்தார். மனைவி S.தனலட்சுமி, மகள் மருமகள் S.Jaya bharathi BE civil, santosh kumar BE it coy s Dhiva bharathi BE ECE, S.Ramkumar C, மாமன் கு.பலராமன், ருக்குமணி யாதவர் தெரு அவலூர்பேட்டை ஆகியோருடன் சிறப்பான வாழ்க்கை நடத்தி வருகிறார். எங்கள் உயிரினும் மேலான பாசமிகு அண்ணன் திரு A.சகாதேவன் அவர்கள் தனது 58ஆம் ஆண்டு பிறந்தநாள் காணும் அவர் வாழ்க்கை வரலாறு,  திருவண்ணாமலை மாவட்டம் திரு LATE ஆரிமுத்துகோன், யசோதை அம்மாள் யாதவ் அவர்களுக்க...

அரசு கலைக் கல்லூரிக்கு காமராஜர் பெயர் சூட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள், நகர பாஜக செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றம்.

 திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரிக்கு காமராஜர் பெயர் சூட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள், நகர பாஜக செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றம். பாஜக நகர தலைவர் திருமாறன் தலைமையில், சிறப்பு விருந்தினராக முன்னாள் மாவட்ட தலைவர் விஜயன் கலந்து கொண்டு சிறப்புரை. திருவண்ணாமலை தெற்கு மாவட்டம், திருவண்ணாமலை நகர பாஜக செயற்குழு கூட்டம் 31-07-2022 அன்று திருவண்ணாமலை செட்டி தெருவில் உள்ள உண்ணாமலை அம்மன் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இச்செயற்குழு கூட்டத்திற்கு  பாஜக நகர தலைவர் திருமாறன் தலைமை தாங்கினார். செயற்குழு கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக முன்னாள் மாவட்ட தலைவர் விஜயன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மாநில, மாவட்ட அணி மற்றும் பிரிவு சக்தி கேந்திர பொறுப்பாளர்கள், கிளை தலைவர்கள், நகர நிர்வாகிகள், மாவட்ட, நகர மகளிர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். சர்வதேச ஒலிம்பியாட் செஸ் போட்டியை தமிழகத்தில் நடத்த வாய்ப்பளித்த பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு நன்றி தெரிவித்தும், பிரதமருக்கு சிறப்பான வரவேற்பு ஏற்பாடுகளை செய்து இருந்த நமது மாநில தலைவர் அண்ணாமலை அவர்களுக்கும் நன்ற...

ஏரிக்கரையை கரைத்து, விவசாய நிலத்தை ஆக்கிரமித்து, மக்கள் வரிப்பணத்தில் சொந்த தேவைக்காக சாலை அமைக்கும் திமுக பிரமுகர், புகார் அளித்த விவசாயிக்கு கொலை மிரட்டல்.

 திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் ஒன்றியம், மேல்பாலூர் கிராமத்தில் உள்ள பெரிய ஏரிக்கரைக்கு கீழ் திமுகவைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர் சொந்த நிலத்திற்கு செல்ல ஏரிக்கரையை கரைத்து, விவசாய நிலத்தை ஆக்கிரமித்து, மக்கள் வரிப்பணத்தில் சாலை அமைத்து விவசாயி சிவக்குமாருக்கு கொலை மிரட்டல் விடுப்பதால் அதிர்ச்சி. திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் ஒன்றியம், மேல்பாலூர் கிராமத்தில் உள்ள பெரிய ஏரிக்கரைக்கு கீழ் அதே கிராமத்தில் உள்ள திமுகவைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர் தனது நிலத்திற்கு செல்ல மக்கள் வரிப்பணத்தில் சாலை அமைத்து வருகிறார். பொறியாளரின் சர்வே எதுவும் செய்யாமல், தன்னுடைய சொந்த தேவைக்காக மக்களின் வரிப்பணத்தை பயன்படுத்தி அவ்வழியாக இருக்கும் ஏரிக்கரை பெரும் பகுதியை கரைத்து, நாசமாக்கி ஏரிக்கரை உடையும் அபாயத்தை ஏற்படுத்தி வருகிறார். மேலும் தனிநபர் சிவக்குமார் என்பவரின் பட்டா நிலத்தில் அராஜகமான முறையில் மண்ணைத் தள்ளி சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். பட்டா நிலத்தில் சாலை போடக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்த சிவகுமார் அவர்களை மிரட்டி, கொலை செய்து விடுவேன், ஆளும் கட்சியைச் சேர்ந்த...