திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக இளைஞர் அணி சார்பில் 75வது சுதந்திர தினம் முன்னிட்டு தேசியக் கொடியுடன் 500க்கும் மேற்பட்ட இருசக்கர வாகன பேரணி இளைஞரணி மாவட்டத் தலைவர் சந்தோஷ் பரமசிவம் தலைமையில்,மாவட்ட தலைவர் ஜீவானந்தம் முன்னிலையில், மாநில பொதுச்செயலாளர் கார்த்தியாயினி, இளைஞர் அணி தேசிய செயலாளர் ஷாம் ராஜ், இளைஞரணி மாநிலத் தலைவர் ரமேஷ் சிவா உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக இளைஞர் அணி சார்பில், திருவண்ணாமலை அண்ணா நுழைவாயில் அருகே உள்ள ஈசானிய மைதானத்தில் இருந்து 75 ஆம் ஆண்டு சுதந்திர தினம் முன்னிட்டு தேசியக் கொடியுடன் 500க்கும் மேற்பட்ட இருசக்கர வாகன அணிவகுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் பேரணி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக பாஜக மாநில பொதுச்செயலாளர் திருமதி கார்த்தியாயினி , இளைஞர் அணி தேசிய செயலாளர் திரு. ஷாம் ராஜ், இளைஞரணி மாநிலத் தலைவர் திரு. ரமேஷ் சிவா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை அண்ணா நுழைவாயில் அருகே உள்ள ஈசானிய மைதானத்தில் இருசக்கர வாகனி பேரணி துவங்கியது.
அனைவரும் தங்கள் இருசக்கர வாகனங்களில் தேசியக் கொடியை கட்டிக்கொண்டு பாரத அன்னையின் புகழ் ஓங்குக என்ற கோஷத்துடன் திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையம், பெரியார் சிலை வழியாக சென்று அண்ணா சிலையில் இருசக்கர வாகன பேரணி நிறைவுற்றது.
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக இளைஞரணி மாவட்டத் தலைவர் சந்தோஷ் பரமசிவம் பேரணிக்கு தலைமை தாங்கினார். திருவண்ணாமலை தெற்கு மாவட்ட தலைவர் ஆர்.ஜீவானந்தம், வடக்கு மாவட்ட தலைவர் சி.ஏழுமலை ஆகியோர் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தனர்.
மாவட்ட பொது செயலாளர்கள் சதீஷ், ரமேஷ், முருகன் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் இருசக்கர வாகனப் பேரணியில் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.





Comments
Post a Comment