பாஜக ஆன்மீகம் மற்றும் கோயில் மேம்பாட்டு பிரிவின் மாவட்ட செயலாளர் கே.அருணாச்சலம் அவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
திருவண்ணாமலை கிரிவலப்பாதை அடிஅண்ணாமலை ஊராட்சியை சேர்ந்த கே.அருணாச்சலம் அவர்களை பாஜகவின் ஆன்மீகம் மற்றும் கோயில் மேம்பாட்டு பிரிவின் மாவட்ட செயலாளராக திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக மாவட்ட தலைவர் R.ஜீவானந்தம் அவர்கள் நியமித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அருணாச்சலம் மகா அன்னதான மடம் மற்றும் நாகாத்தம்மன் திருக்கோயில் திருப்பணிகளை சிறப்பான முறையில் தொடர்ந்து அருணாச்சலம் அவர்கள் செய்து வருகிறார்.
பௌர்ணமி தினத்தன்று பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. ஆன்மீகப் பணிகளில் இவர் தொடர்ந்து பல ஆண்டு காலமாக சிறந்து செயல்பட்டு வருகிறார்.
1972 ஆம் ஆண்டு முதல் கடந்த 50 ஆண்டு காலமாக ஆன்மீகப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். கிரிவலப் பாதையில் கடந்த 50 ஆண்டு காலமாக தனியார் வசம் இருந்த சந்திர லிங்கத்திற்கு சொந்தமான 53 சென்ட் நிலம் அருணாச்சலம் அவர்களின் தொடர் போராட்டத்தின் பலனாக இந்து சமய அறநிலையத்துறையின் வசம் ஒப்படைக்கப்பட்டது என்பது இவர் பணியின் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதன் எடுத்துக்காட்டாகும். இவர் இது போல் பல்வேறு பணிகளை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பக்தர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக ஆன்மீகப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்.
இவரின் பணியை அங்கீகரிக்கும் விதமாக அவருக்கு ஆன்மீகம் மற்றும் கோயில் மேம்பாட்டு பிரிவு மாவட்ட செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்து கோயில்கள் மற்றும் அதன் சொத்துக்கள் மாற்று மதத்தினர் உள்ளிட்ட பலராலும் அபகரிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. அபகரிக்கப்பட்ட கோயில் நிலங்கள் அனைத்தையும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்து சட்ட போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் மூலம் மீண்டும் கோயிலுக்கு மீட்டு கொடுப்பதே தனது தலையாய கடமையாக இருக்கும் என்று ஆன்மீகம் மற்றும் கோயில் மேம்பாட்டு பிரிவு மாவட்ட செயலாளர் அருணாச்சலம் அவர்கள் தெரிவித்துள்ளார்.
ஆன்மீகம் மற்றும் கோயில் மேம்பாட்டு பிரிவின் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள கே.அருணாச்சலம் அவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறனர்.



Comments
Post a Comment