ஓபிஎஸ் அணி தெற்கு மாவட்ட செயலாளர் தலைமையில் அண்ணா உள்ளிட்ட தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை.
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அதிமுக ஓபிஎஸ் அணி சார்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட பேரணி, ஓபிஎஸ் அணியில் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள மாவட்ட செயலாளர் பீரங்கி வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது.
அதிமுக இரட்டை தலைமையின் கீழ் செயல்பட்டு வந்த நிலையில் தற்போது அதிமுகவில் ஒற்றை தலைமை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் நிலவிவரும் நிலையில் அதிமுகவினர் ஓபிஎஸ் அணி, ஈபிஎஸ் அணி என இரண்டு அணிகளாக செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் புதிதாக 24 மாவட்ட செயலாளர்களை நியமித்து அறிக்கை வெளியிட்டார்.
அதில் ஓபிஎஸ் அணியின் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அதிமுக செயலாளராக பீரங்கி வெங்கடேசன் அவர்களை நியமித்து அறிவிப்பு வெளியிட்டார். அதனை தொடர்ந்து ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அவர்களுக்கு நன்றி தெரிவித்தும், ஓபிஎஸ் அணியின் பலத்தை வெளிப்படுத்தும் வகையில் திருவண்ணாமலை திருக்கோவிலூர் சாலையில் அதிமுக ஓபிஎஸ் அணி தொண்டர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருடன் தெற்கு மாவட்ட செயலாளர் பீரங்கி வெங்கடேசன் பேரணியாக புறப்பட்டு சென்று நகரின் முக்கிய வீதிகள் வழியாக அண்ணா சிலை, பெரியார் சிலை, அம்பேத்கர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா திருவுருவப்படத்தை நான்கு சக்கர வாகனத்தில் எடுத்துக்கொண்டு மேல தாளங்கள் முழங்க பேரணியாக சென்றபோது அதிமுக ஓபிஎஸ் அணி நிர்வாகிகளும் தொண்டர்களும் பட்டாசு வெடித்து இனிப்புகளை பொதுமக்களுக்கு வழங்கி கொண்டாடினர்.
திருவண்ணாமலை சன்னதி தெருவில் உள்ள மறைந்த அதிமுக முன்னாள் நகர செயலாளர் கனகராஜ் வீட்டிற்கும் அவர்கள் சென்று அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்த பேரணியில் 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.





Comments
Post a Comment