திருவண்ணாமலை மாவட்டம், ஜமீன்கூடலூர் கிராமத்தில் உள்ள ஒருங்கிணைந்த ராணுவ வீரர்கள் நலச்சங்கம் சார்பில் 23ம் ஆண்டு கார்கில் போர் வெற்றி விழா,பாரத அன்னையின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். மாவட்ட தலைவர் பி.கருணாநிதி தலைமையேற்று சிறப்புரை.
திருவண்ணாமலை மாவட்டம், ஜமீன்கூடலூர் கிராமத்தில் உள்ள முன்னாள் மற்றும் இந்நாள் ராணுவ சங்கத்தினர் ஒருங்கிணைந்து 23ம் ஆண்டு கார்கில் போர் வெற்றி விழாவை சிறப்பாக கொண்டாடினர்.
முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் பாரத அன்னையின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி பாரத் மாதா கீ ஜே என்ற கோஷத்துடன் சல்யூட் அடித்து மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைந்த முன்னாள் மற்றும் இந்நாள் ராணுவ சங்கத் தலைவர் பி.கருணாநிதி அவர்கள் தலைமையேற்று சிறப்புரையாற்றினார்.
சங்கத்தின் மாவட்ட செயலாளர் சுபேதார் ஏ.சகாதேவன், மாவட்ட துணைத் தலைவர் கேப்டன் எல்.அந்துராஜ்,அவுல்தார் வேலு, சுபேதார் சம்பத், கேப்டன் பஷீர் அஹமத், அவுல்தார் என்.கே.பென்ஜமின், மாவட்டத் தலைவர்கள், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் ஜமீன்கூடலூர் கிராமத்தைச் சேர்ந்த தலைவர் அவுல்தார் அருள்தாஸ், துணைத் தலைவர் அவுல்தார் சவரிமுத்து, பொருளாளர் அவுல்தார் செபஸ்டின், செயலாளர் அவுல்தார் ராயர், ஆலோசகர் அவுல்தார் ஆம்ப்ரோஸ், வீர தாய்மார்கள் உள்ளிட்ட ஏராளமான முன்னாள் ராணுவ வீரர்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.





Comments
Post a Comment