"பி.கக்கன் வீர விருது" முதுகலை தமிழ் ஆசிரியர் அ.முருகையனுக்கு திண்டுக்கல் பசுமை வாசல் பவுண்டேஷன் வழங்கி கௌரவித்தது.
திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் அடுத்த அண்டம்பள்ளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் முதுகலை தமிழ் ஆசிரியராக அ.முருகையன் அவர்கள் பணியாற்றி வருகிறார்.
அவர் சிறப்பாக பணியாற்றியதை அங்கீகரிக்கும் விதமாக தமிழக அரசு அவருக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது கொடுத்து கவுரவ படுத்தியது.
தொடர்ந்து அவர் இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழ் துறையிலும் அவரது சேவை சிறப்பாக இருந்து வருவதை அறிந்த திண்டுக்கல் பசுமை வாசல் பவுண்டேஷன்,குமரி மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்நாடு பனைமரம் காக்கும் பாதுகாப்பு இயக்கம், சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த ஸ்ரீ சக்சஸ் அகாடமி & பவுண்டேஷன், திருச்சிராப்பள்ளி வீரமங்கை சமூக சிந்தனை அறக்கட்டளை ஆகிய அமைப்புகள் இணைந்து தேசத்தின் வீர விருதுகள் 2022 "பி.கக்கன் வீர விருது" முதுகலை தமிழ் ஆசிரியர் அ.முருகையன் அவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் விருதினை வழங்கி பாராட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
"பி.கக்கன் வீர விருது" பெற்ற ஆசிரியரை தலைமை ஆசிரியர் உதவி தலைமை ஆசிரியர்கள், இருபால் ஆசிரியர்கள், ஊராட்சிமன்ற தலைவர், ஊர்பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்தனர்.


Comments
Post a Comment