அரசு கலைக் கல்லூரிக்கு காமராஜர் பெயர் சூட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள், நகர பாஜக செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றம்.
திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரிக்கு காமராஜர் பெயர் சூட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள், நகர பாஜக செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றம். பாஜக நகர தலைவர் திருமாறன் தலைமையில், சிறப்பு விருந்தினராக முன்னாள் மாவட்ட தலைவர் விஜயன் கலந்து கொண்டு சிறப்புரை.
திருவண்ணாமலை தெற்கு மாவட்டம், திருவண்ணாமலை நகர பாஜக செயற்குழு கூட்டம் 31-07-2022 அன்று திருவண்ணாமலை செட்டி தெருவில் உள்ள உண்ணாமலை அம்மன் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இச்செயற்குழு கூட்டத்திற்கு பாஜக நகர தலைவர் திருமாறன் தலைமை தாங்கினார்.
செயற்குழு கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக முன்னாள் மாவட்ட தலைவர் விஜயன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
மாநில, மாவட்ட அணி மற்றும் பிரிவு சக்தி கேந்திர பொறுப்பாளர்கள், கிளை தலைவர்கள், நகர நிர்வாகிகள், மாவட்ட, நகர மகளிர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
சர்வதேச ஒலிம்பியாட் செஸ் போட்டியை தமிழகத்தில் நடத்த வாய்ப்பளித்த பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு நன்றி தெரிவித்தும், பிரதமருக்கு சிறப்பான வரவேற்பு ஏற்பாடுகளை செய்து இருந்த நமது மாநில தலைவர் அண்ணாமலை அவர்களுக்கும் நன்றி தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருவண்ணாமலையில் கஞ்சா புழக்கத்தை அறவே ஒழிக்கவும், திருநீலகண்டர் தெருவில் உள்ள கிணற்றை தூய்மைப்படுத்த வேண்டும்,
சாத்தனூர் அணையில் இருந்து வரும் குடிநீர் சுத்திகரிப்பு செய்து விநியோகிக்க வேண்டும், பேருந்து நிலையம் மற்றும் மலை சுற்று பாதையில் உள்ள கழிவறைகளுக்கு கட்டணம் இன்றி இலவசமாக அனுமதி தர வேண்டும், திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரிக்கு காமராஜர் பெயர் சூட்ட வேண்டும், ஈசானிய லிங்கம் அருகில் அமைந்துள்ள குப்பை கிடங்கை அகற்றவும், அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு விரைவில் யானை வாங்கி தர கோரியும்,
கிரிவலப் பாதையில் கருணாநிதி சிலை வைத்ததை கண்டித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.





Comments
Post a Comment