Skip to main content

திருவண்ணாமலை நகரத் தலைவர் A.சகாதேவன் அவர்கள் தன்னுடைய பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு மாநிலத்தின் யாதவர் மகாசபை தலைவர் அய்யா நாசே ராமச்சந்திரன் அவர்களை சந்தித்து பிறந்த நாள் வாழ்த்துக்கள் பெற்றார்.

 தென்னிந்திய யாதவர் சங்கம் திருவண்ணாமலை நகரத் தலைவர் A.சகாதேவன் அவர்கள் தன்னுடைய பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு மாநிலத்தின் யாதவர் மகாசபை தலைவர் அய்யா நாசே ராமச்சந்திரன் அவர்களை சந்தித்து பிறந்த நாள் வாழ்த்துக்கள் பெற்றார்.மாவட்ட தலைவர் கமலக்கண்ணன், துணை தலைவர் கார்த்திக், செயலாளர் நாராயணன், துணை தலைவர் கலைச்செல்வன்,பொருளாளர் மற்றும் செட்டிப்பட்டி தொழில் அதிபர் அண்ணன் ராதாகிருஷ்ணன், அருண் குமார் ஒன்றிய செயலாளர் செங்கம், SRT வேலு மாவட்ட செயலாளர் S.மணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

A..சகாதேவன் அவர்கள் 06/08/1964 ஆம் ஆண்டு எரும்பூண்டி கிராமத்தில் பிறந்தார்.

மனைவி S.தனலட்சுமி, மகள் மருமகள் S.Jaya bharathi BE civil, santosh kumar BE it coy s Dhiva bharathi BE ECE, S.Ramkumar C, மாமன் கு.பலராமன், ருக்குமணி யாதவர் தெரு அவலூர்பேட்டை ஆகியோருடன் சிறப்பான வாழ்க்கை நடத்தி வருகிறார்.

எங்கள் உயிரினும் மேலான பாசமிகு அண்ணன் திரு A.சகாதேவன் அவர்கள் தனது 58ஆம் ஆண்டு பிறந்தநாள் காணும் அவர் வாழ்க்கை வரலாறு,

 திருவண்ணாமலை மாவட்டம் திரு LATE ஆரிமுத்துகோன், யசோதை அம்மாள் யாதவ் அவர்களுக்கு 3வதாக பிறந்தார்.

  தன் பள்ளி படிப்பை எரும்பூண்டி உயர்நிலை பள்ளியில் படித்தார். பின்னர் அவலூர்பேட்டையில் மேல்நிலைப்பள்ளி படிப்பை முடித்தார்.

தன் தந்தை ஒரு விவசாயி என்பதால் இவரும் விவசாயத்தில் ஈடுபட்டார். பிறகு பால் தொழில் செய்து வந்தார்.

  பின்னர் கொத்தந்தவாடி TANCOF செயலாளர் பொறுப்பில் மிக சிறந்த முறையில் பணியாற்றினார். 

தன் தந்தை ஒரு அரசியல்வாதி என்பதால் தந்தையுடன் பணி செய்தேன். பிறகு நான் இந்திய ராணுவத்தில் சேர்ந்தது மிக மிக சிறந்த முறையில் பணியாற்றி வந்தார். பின்னர் உயர் அதிகாரி சான்று பெற்றுள்ளார்.

  சென்னை மதுரவாயல் எங்கள் உயிருக்கு மேலான தலைவர் தெய்வ திரு கு.இராமசந்தர மருதுபாண்டியர் அவருடன் இணைந்து கிரிவல பாதையில் வீரன் அழகுமுத்துக்கோன் சிலை அமைக்க நான் முன்னாள் vc தியாகராஜன் EX VC ஆரணி வழக்கறிஞர் பார்த்திபன் அவர்கள் சேர்ந்தது பணிபுரிந்தது மிகவும் பெருமையாக உள்ளது.

பிறந்தநாள் வாழ்த்து மடல்,


மகிழ்வான தருணங்கள் மலரட்டும்

இனிமையாக.

 நெகிழ்வான நேரங்கள்

நிகழட்டும் இளமையாக.

எண்ணங்களும் ஏக்கங்களும்

எல்லை தாண்டி வெல்லட்டும்.

கையிட்டு செய்பவைகள்

கையில் வந்து சேரட்டும்.

வலிமையான வரிகளால்

வாழ்த்திட தெரியவில்லை..

எனவே மனமார வாழ்த்துகின்றேன்.

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.!

 இங்கனம், 

தென்னிந்திய யாதவர் சமுதாயம்.

Comments

Popular posts from this blog

திருமண அமைப்பாளர்கள் நலவாரியம் அமைக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு

  திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு பாரதிய திருமண அமைப்பாளர்கள் நலச்சங்க நிறுவனத் தலைவர் செங்கம் ராஜா தலைமையில் தமிழ் மாநில‌ BMS உடன்‌ இணைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு பாரதிய திருமண அமைப்பாளர்கள் நலச் சங்கத்தின் சார்பாக திரளான சங்க நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.  அந்தக் கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழகத்தில் உள்ள இரண்டு இலட்சம் ‌ திருமண அழைப்பாளர்கள் தொழிலை தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறையில் அமைப்புச் சாரா தொழிலாளர்களாக சேர்க்க‌ வேண்டி‌ தமிழக முதல்வருக்கு பரிந்துரை செய்ய மாவட்ட ஆட்சியர் வழியாக கோரிக்கை மனு வழங்கப்பட்டது.  சமூக பாதுகாப்பு, இலவச பஸ் பாஸ் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவினை 70 ஆண்டுகால தொழிற்சங்கமான மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ‌BMS‌ ல்‌ இணைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு பாரதிய திருமண அமைப்பாளர்கள் நலச் சங்கம் சார்பில் இதுபோன்று தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர் வழியாக கோரிக்கை மனு அளிக்கப்படுகிறது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சங்க நிறுவனத் தலைவர் செங்கம் ராஜா தலைமையில், மாநிலத்...

34 ஆண்டுகளுக்குப் பிறகு முன்னாள் மாணவர்கள் மீண்டும் ஒன்றிணைந்த சுவாரஸ்ய நிகழ்ச்சி

  திருவண்ணாமலை வி.டி.எஸ் ஜெயின் மேல்நிலைப் பள்ளியில் (1986 - 1991) ஆம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவர்கள் 34 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒன்றிணையும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் பழைய நினைவுகளை திரும்பிப் பார்க்கும் அற்புத நிகழ்வாக சிறப்பான முறையில் நடைபெற்றது.  தாங்கள் பயின்றபோது பாடம் எடுத்த இருபால் ஆசிரியர்களை நிகழ்ச்சியில் சிறப்பான வரவேற்பு அளித்து கௌரவித்தனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் தாங்கள் பயிற்றுவித்த மாணவர்கள் பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வருவதை பெருமிதத்துடன் தங்கள் வாழ்த்துரையில் குறிப்பிட்டு பேசினர்.  இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் தங்களின் பழைய நினைவுகளை நினைவு கூர்ந்து தங்கள் மனதில் அலைமோதும் எண்ணங்களை வெளிப்படுத்தி புகைப்படம் எடுத்து மகிழ்ச்சி அடைந்தனர். செயற்குழு உறுப்பினர்கள் ரேகா, கற்பகம், சிவக்குமார், சுரேஷ், சலீம், கார்த்தி, கண்ணன், முத்து உள்ளிட்டோர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிறப்பான முறையில் செய்திருந்தனர்.

காவலர்கள் சொத்துக்களை பறிமுதல் செய்து பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வழங்க வலியுறுத்தி ஜனநாயக இயக்கங்கள் ஆர்ப்பாட்டம்

  திருவண்ணாமலை மார்கெட்டிற்கு காய்கறிகள் ஏற்றி வந்த ஆந்திர மாநில லோடு வாகனத்தில் வந்த பெண்களை சோதனை என்ற பெயரில் பாலியல் வண்புனர்வு செய்த கிழக்கு காவல் நிலையத்தில் பணிபுரிந்த காவலர்களான சுந்தர், சுரேஷ்ராஜா ஆகிய இருவரையும் கண்டித்து ஜனநாயக இயக்கங்களின் ஒருங்கிணைப்பில் ஏராளமானோர் பங்கேற்ற கண்டன ஆர்ப்பாட்டம் காமராஜர் சிலை அருகே நடைபெற்றது. தலித் விடுதலை இயக்கம் மாநில பொதுச் செயலாளர் தோழர் தலித் நதியா ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார்.  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் காவலர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்து பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வழங்க வேண்டும், குற்றம் செய்யும் காவலர்களை சக காவலர்கள் பாதுகாக்கக் கூடாது எனவும், பாலியல் குற்றங்களில் ஈடுபடும் அதிகாரிகளின் பணியை நிரந்தரமாக நீக்க சட்டம் இயற்ற வேண்டும், உழைக்கும் மக்களின் குரலாக செயல்படும் ஆட்சியில் இல்லாத ஜனநாயக இயக்கங்கள், கட்சிகள், அமைப்புகளுக்கு உரிய மதிப்பும், பாதுகாப்பும் வழங்குவது அரசு நிர்வாகம் மற்றும் காவல்துறையின் கடைமை எனவும், பாதிக்கப்பட்ட மக்களுக்காக போராட்டம் நடத்துவதற்கு அனுமதி மறுப்பதையும் கண்டித்து ...