ஏரிக்கரையை கரைத்து, விவசாய நிலத்தை ஆக்கிரமித்து, மக்கள் வரிப்பணத்தில் சொந்த தேவைக்காக சாலை அமைக்கும் திமுக பிரமுகர், புகார் அளித்த விவசாயிக்கு கொலை மிரட்டல்.
திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் ஒன்றியம், மேல்பாலூர் கிராமத்தில் உள்ள பெரிய ஏரிக்கரைக்கு கீழ் திமுகவைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர் சொந்த நிலத்திற்கு செல்ல ஏரிக்கரையை கரைத்து, விவசாய நிலத்தை ஆக்கிரமித்து, மக்கள் வரிப்பணத்தில் சாலை அமைத்து விவசாயி சிவக்குமாருக்கு கொலை மிரட்டல் விடுப்பதால் அதிர்ச்சி.
திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் ஒன்றியம், மேல்பாலூர் கிராமத்தில் உள்ள பெரிய ஏரிக்கரைக்கு கீழ் அதே கிராமத்தில் உள்ள திமுகவைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர் தனது நிலத்திற்கு செல்ல மக்கள் வரிப்பணத்தில் சாலை அமைத்து வருகிறார்.
பொறியாளரின் சர்வே எதுவும் செய்யாமல், தன்னுடைய சொந்த தேவைக்காக மக்களின் வரிப்பணத்தை பயன்படுத்தி அவ்வழியாக இருக்கும் ஏரிக்கரை பெரும் பகுதியை கரைத்து, நாசமாக்கி ஏரிக்கரை உடையும் அபாயத்தை ஏற்படுத்தி வருகிறார்.
மேலும் தனிநபர் சிவக்குமார் என்பவரின் பட்டா நிலத்தில் அராஜகமான முறையில் மண்ணைத் தள்ளி சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
பட்டா நிலத்தில் சாலை போடக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்த சிவகுமார் அவர்களை மிரட்டி, கொலை செய்து விடுவேன், ஆளும் கட்சியைச் சேர்ந்தவன் நான் என்பதால் என்னை ஒன்றும் செய்ய முடியாது என்று அராஜக போக்கில் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
அவருக்கு துணையாக ஊராட்சி மன்ற தலைவரின் கணவன் இளங்கோவன் என்பவர் ஊராட்சி மன்ற தலைவராக அவரது மனைவி சரஸ்வதி இளங்கோவன் இருப்பதால் அனைத்து வேலைகளையும் இளங்கோவன் என்பவரே பார்த்து வருகிறார்.
இந்த பட்டா இடத்தில் சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்தால் உன்னை ஊரில் வாழ விடமாட்டோம், இந்த ஊரில் உன் குடும்பம் வாழ முடியாது. மேலும் இந்த ஊரில் உள்ள எந்த வேலையும் செய்ய விட மாட்டோம், யாரும் உனக்கு ஆதரவாக வர மாட்டார்கள், நான் தலைவராக இருப்பதால் என்னை யாரும் எதுவும் செய்ய முடியாது, 5 வருடம் என்னுடைய இஷ்டத்திற்கு தான் நான் வேலை செய்வேன் என்று அசிங்கமான வார்த்தைகளில் கொச்சையாக தனது பொறுப்புக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசி வருகிறார்.
இதனால் வேதனை அடைந்த சிவக்குமார் அரசாங்க அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த பயனும் இல்லை. காவல்துறைக்கு பலமுறை புகார் தெரிவித்தும் புகாரை வாங்க மறுத்து தங்கள் பணியை செய்யாமல் நீதிமன்றத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தி உள்ளனர்.
எனவே மாவட்ட நிர்வாகமும், மாவட்ட காவல் துறையும் இதற்கு உரிய நடவடிக்கை எடுத்து, பட்டா நிலத்தை பயன்படுத்தி சாலை அமைக்க கூடாது என்று சிவக்குமார் என்ற விவசாயி வேதனையுடன் தன் கோரிக்கையை முன் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



Comments
Post a Comment