250 மாணவர்களுக்கு பேனா, நோட்டு, இனிப்பு வழங்கிய முத்து மாரியம்மன் ட்ரஸ்டின் நிர்வாக அறங்காவலர் முருகன் சுவாமிகள்
திருவண்ணாமலை மாவட்டம் சு.பொலக்குணம் உயர்நிலைப் பள்ளியில் 75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தப்பட்டது. சென்ற ஆண்டு 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு டிக்சனரி வழங்கி, மேலும் 250 மாணவர்களுக்கு பேனா, நோட்டு, இனிப்பு உள்ளிட்டவற்றை முத்து மாரியம்மன் ட்ரஸ்டின் நிர்வாக அறங்காவலர் முருகன் சுவாமிகள் வழங்கி பாராட்டினார்.
திருவண்ணாமலை மாவட்டம் சு.பொலக்குணம் உயர்நிலைப் பள்ளியில் 75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா கொடி ஏற்றி மாணவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் குப்பு ஜெயக்குமார், துணைத் தலைவர், தலைமை ஆசிரியர் ஆசிரியர்கள் கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் சென்ற ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ மாணவிகளுக்கு டிக்சனரி முத்து மாரியம்மன் ட்ரஸ்டின் நிர்வாக அறங்காவலர் முருகன் சுவாமிகள் வழங்கினார்.
இன்று சுதந்திர தினம் கொண்டாடப்படுவதை ஒட்டி அனைத்து மாணவ மாணவிகளுக்கும் பேனா மற்றும் நோட்டு இலவசமாக வழங்கி நல்ல முறையில் படித்து முன்னேற வேண்டும் என்று வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
முன்னாள் மாணவர்களும் ஆர்வமுடன் வந்து மாணவர்களுக்கு பேனாவை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.



Comments
Post a Comment