Skip to main content

Posts

Showing posts from August, 2024

500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட மத்திய பட்ஜெட் விளக்க மாபெரும் பொதுக்கூட்டம், மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் சிறப்புரை

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக, கலசப்பாக்கம் சட்டமன்றத் தொகுதி, புதுப்பாளையம் கிழக்கு ஒன்றியம், காஞ்சி பேருந்து நிறுத்தம் அருகில் மாபெரும் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் மாவட்ட துணைத் தலைவர், ஒன்றிய கவுன்சிலர் K.ரமேஷ் தலைமையில் நடைபெற்றது. பாஜக மாநில பொதுச் செயலாளர், தஞ்சை பெருங்கோட்ட பொறுப்பாளர்  கருப்பு முருகானந்தம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும், மாநில செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பொதுமக்களுக்கு விளக்கும் விதமாகவும், 2024-2025 ஆண்டுக்கான மத்திய அரசு பட்ஜெட் விளக்கி விரிவாக பேசினார். காஞ்சியில் நடைபெற்ற பட்ஜெட் விளக்கப் பொதுக் கூட்டத்திற்கு வருகை தந்த மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தத்திற்கு முன்னாள் மாவட்ட செயலாளர் ஏ.டி.எம்.தர்மலிங்கம் ஆளுயர ரோஜா மலர்மாலை அணிவித்து, மலர் கிரீடம் சூட்டி, பொன்னாடை போர்த்தி சிறப்பான முறையில் வரவேற்பு அளித்தனர். மாவட்டத்தலைவர் பாலசுப்பிரமணியம்,  பெருங்கோட்ட அமைப்பு செயலாளர் குணா, மாவட்ட பார்வையாளர் தசரதன், மா...

நாட்டு மக்கள் நலமுடன் வாழ புனித மேரி மாதா ஆலயத்தில் சிறப்பு தொழுகை

  திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் வட்டம், ராஜந்தாங்கல் ஊராட்சி, தளவாய்குளம் கிராமத்தில் உள்ள புனித மேரி மாதா கெபி கோயில் அமைந்துள்ள இடத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்கள் நலமுடன் வாழ வேண்டும் என்பதற்காக சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது.  சாணிபூண்டி, கெங்கம்பட்டு, ஆவூர், பவுத்திரம், தளவாய்குளம், ராஜந்தாங்கல் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு புனித மேரி மாதா மற்றும் இயேசு கிறிஸ்துவை மன்றாடி வழிபாடு நடத்தினர். இந்திய சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 அன்று ஒவ்வொரு ஆண்டும் இந்த சிறப்பு தொழுகை நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆகஸ்ட் 15 அன்று பிறந்தநாள் காணும் குழந்தைகள் உள்ளிட்ட அனைவருக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து கூட்டு பிரார்த்தனை பங்கு தந்தையர்கள் தலைமையில் சிறப்பான முறையில் நடைபெற்றது.

அருள்மிகு ஸ்ரீ முனிஸ்வரன், ஸ்ரீ ரேணுகாம்பாள் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்

  திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், வீரானந்தல் மதுரா அடிவாரம் கோரை ஆற்றங்கரை GPR பண்ணையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முனிஸ்வரன் மற்றும் ஸ்ரீ ரேணுகாம்பாள் ஆகிய தெய்வங்களுக்கு பிரதிஷ்டை செய்து ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.  இந்த கும்பாபிஷேக நிகழ்வில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்து வழிபட்டனர். இன்று அதிகாலை கிராம தேவதைக்கு பிரார்த்தனை செய்து கோ பூஜை, ஸ்ரீ கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவகிரக பூஜை, பூர்ணாஹூதி மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.  பின்னர் அருள்மிகு ஸ்ரீ முனீஸ்வரருக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்று தீப ஆராதனையை தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.   ஸ்ரீ முனீஸ்வரர் ஆலய நிர்வாகிகள், அடிவாரம் ஜி.என் பாளையம் புதுப்பட்டான் வகையறா, பழவா கவுண்டர் கவுண்டர் வகையறா, கீழ்குப்பம் புதுபட்டான் வீட்டு வகையறா, மேல் குப்பம் மற்றும் ஊர் பொதுமக்கள் மகா கும்பாபிஷேக நிகழ்வுகளை சிறப்பான முறையில் நடத்தினர்.

குங்குிலிநத்தம் கிராமத்தில் கூழ் வார்த்தல் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது

  திருவண்ணாமலை மாவட்டம், குங்குிலிநத்தம் கிராமத்தில் எழுந்தருளி அருள்பாளித்து வரும் மாரியம்மன் திருக்கோயில் கூழ் வார்த்தல் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.  அம்மன் கிரகம், ஆண்டவர் கிரகம், அம்மன் கிரகம் என 3 கிரகங்கள் ஜோடித்து ஊர்வலமாக வந்து கிராமத்தில் உள்ள பொதுமக்கள் தங்கள் வீடுகளில் சுவாமிக்கு பாத அபிஷேகம் செய்து தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி தீபாரதனை காட்டி வழிபட்டனர். மாரியம்மன் கோயில் வளாகத்தை 3 கிரகம் அடைந்த பிறகு பக்தர்கள் தங்கள் வீடுகளில் இருந்து எடுத்து வந்த கூழை பெரிய கொப்பரையில் ஊற்றி பொது மக்களுக்கு படைக்கப்பட்ட கூழ் ஆனது பரிமாறப்பட்டது.   தர்மகர்த்தா ஜி.சந்தோஷ், ஆர்.அண்ணாமலை, சீதாராமன், திருவேங்கடம், பாலகிருஷ்ணன், ஏழுமலை, விஜயமூர்த்தி, தசரதன், பிரசாந்த் உள்ளிட்ட ஏராளமானோர் கூழ் ஊற்றும் திருவிழாவில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர். கிராமத்தில் ஆடி மாதத்தில் கூழ் ஊற்றினால் மழை பெய்யும் என்பது ஐதீகமாகும்.

பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வழிவகை செய்யும் மசோதாவை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 16 அம்ச தீர்மானங்களை தமிழ்நாடு பெண்கள் இணைப்பு குழுவின் 29 வது மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது

  திருவண்ணாமலை மீனாட்சி திருமண மண்டபத்தில் தமிழ்நாடு பெண்கள் இணைப்பு குழுவின் 29 வது மாநில மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பெண்களை உள்ளடக்கிய முன்னேற்றம் என்ற தலைப்பில் இரண்டு நாட்கள் 29 வது மாநில மாநாடு நடைபெற்றது.  இதில் தமிழகம் முழுவதும் இருந்து 500க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு மாநில மாநாட்டின் துவக்கமாக கொடி ஏற்றி துவக்கி விழா நடைபெற்றது. பெண்களை உள்ளடக்கிய முன்னேற்றம் என்ற தலைப்பில் பட்டிமன்றமும் மறுநாள் மிகப் பிரமாண்டமான பொதுக்கூட்டமும் திருவண்ணாமலை திருவூடல் தெருவில் நடைபெற்றது.  இந்தக் கூட்டத்திற்கு மாநில தலைவி திருமதி ஷீலு தலைமை தாங்கினார். திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுமதி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரையும் வரவேற்று நிகழ்ச்சியை வழி நடத்தினார்.  சிறப்பு அழைப்பாளர்களாக குற்றவியல் காவல் ஆய்வாளர் கவிதா, ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் வீரமணி, பேராசிரியர் கனிமொழி, மருத்துவர் அனுராதா, மாநிலச் செயலாளர் பொன்னுத்தாய், கன்னியாகுமரி மாவட்டம் லிட்வின் மேரி உள்ளிட்ட 22 மாவட்டங்களைச் சேர்ந்த மகளிர் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். பொதுக் கூட்டத்தி...

ஸ்ரீ புற்று பாலநாகாத்தம்மன் ஆலய 10ம் ஆண்டு நாகசதுர்த்தி விழா, பெண்கள் 108 பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து அம்மனுக்கு அபிஷேகம்

  திருவண்ணாமலை மாவட்டம், வடப்புழுதியூர் மதுரா முனியப்பன்தாங்கல் கிராமத்தில் எழுந்தருளி அருள் பாலித்து வரும் ஸ்ரீ புற்று பாலநாகாத்தம்மன் ஆலய 10ம் ஆண்டு நாகசதுர்த்தி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.  இன்று காலை 8 மணிக்கு ஸ்ரீ விநாயகர் ஆலயத்தில் இருந்து ஏராளமான பெண்கள் 108 பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து சுவாமிக்கு அபிஷேகம் செய்தனர். பின்னர் ஸ்ரீ புற்று பாலநாகாத்தம்மனுக்கு சிறப்பு யாகம் நடத்தப்பட்டது.  இந்த யாகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தங்கள் வேண்டுதல்களை வைத்து வணங்கினர். சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் இதில் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டு அம்மன் அருள் பெற்றனர். நாகசதுர்த்தி விழாவில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று மாலை தீமிதி திருவிழாவும் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.  ஸ்ரீ புற்று பாலநாகாத்தம்மன் அறக்கட்டளை, முனியப்பந்தாங்கல் கிராம பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் நாகசதுர்த்தி விழாவினை சிறப்பான முறையில் நடத்தினர். சிறப்பு அழைப்பாளர்களாக தேவர் வாழ்க்கை வரலாறு திரைப்பட தயாரிப்பாளரும், தேசிய தலைவர் திரைப்...

100 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த ஸ்ரீ செல்வ முத்து மாரியம்மன் ஆலயதத்தின் மகாலட்சுமி மகா கும்பாபிஷேகம் 15 ஆண்டுகளுக்குப் பிறகு வெகு விமரிசையாக நடைபெற்றது

  அருள்மிகு ஸ்ரீ செல்வ முத்து மாரியம்மன் ஆலய அஷ்டபந்தன புனராவர்த்தன மகா கும்பாபிஷேகம், 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வழிபட்டனர். திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் வட்டம், பன்னியூர் கிராமத்தில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ செல்வ முத்து மாரியம்மன் ஆலய புனராவர்த்தன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட பொதுமக்களும், பக்தர்களும் கலந்து கொண்டு கும்பாபிஷேக நிகழ்வுகளை தரிசித்து அருள்மிகு ஸ்ரீ செல்வ முத்து மாரியம்மன் அருளை பெற்றனர். நேற்று கும்பாபிஷேக நிகழ்வுகள் மங்கள இசை, அனுக்ஞை மகா கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம், கோபூஜை, புதிய சிலைகள் கண் திறத்தலுடன் துவங்கியது. பின்னர் வாஸ்து சாந்தி, பிரவேசபலி, முதற்கால யாக பூஜைகள் ஆரம்பிக்கப்பட்டு பூர்ணாஹுதி, தீபாராதனை, சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இன்று காலை மங்கள இசையுடன் இரண்டாம் கால யாக பூஜைகள் ஆரம்பிக்கப்பட்டு சிலைகளுக்கு உயிர் தரப்பட்டு பூர்ணாஹுதியுடன் தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் யாகசாலையில் இருந்து கலசம்...

செல்லங்குப்பம் கிராம பொதுமக்கள் சார்பாக கூழ் ஊற்றும் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் வட்டம், செல்லங்குப்பம் கிராமத்தில் கூழ்வார்த்தை திருவிழா நடைபெற்றது. இதில் அம்மன் சுவாமிக்கு கரகம் ஜோடித்து அனைத்து பொதுமக்களும் தங்கள் வீடுகளில் இருந்து கூழ் ஊற்றி எடுத்து வந்து கோயில் வளாகத்தில் கூழ் ஊற்றினர். கோயில் வளாகத்தில் படைக்கப்பட்ட கூழினை அனைவரும் பெற்றுச் சென்றனர்.  செல்லங்குப்பம் கிராம பொதுமக்கள் சார்பாக கூழ் ஊற்றும் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் கிராமத்தில் உள்ள அனைவரும் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். சக்தி கிரகம், ஆண்டவன் கிரகம், மாரியம்மன் கிரகம் ஆகிய கிரகமானது பம்பை உடுக்கை, மேளதாளம் முழங்க ஊர் சுற்றி வந்து பக்தர்களை அருள்பாலித்தது. கோயில் சம்பந்தமாக இரு பிரிவினருடைய ஏற்கனவே ஏற்பட்ட தகராறு காரணமாக டிஎஸ்பி தலைமையில் 40க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு அளித்தனர்.

அகில இந்திய இந்து மக்கள் கட்சி சார்பில் நவோதயா பள்ளிகள் மற்றும் சிபிஎஸ்சி பாடத்திட்டம் வேண்டுமென்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அகில இந்திய இந்து மக்கள் கட்சி சார்பில் நவோதயா பள்ளிகள் வேண்டுமென்றும், தமிழக அரசு பள்ளிக்கூடங்களில் சிபிஎஸ்சி படிப்பு வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இந்த ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய இந்து மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் செஞ்சி ராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தமிழகம் முழுவதும் நவோதயா பள்ளிகளை திறந்து, அரசு பள்ளிகளில் சிபிஎஸ்சி பாடத்திட்டம் நடைமுறைப்படுத்த வேண்டும் என தனது சிறப்பு ரயில் வலியுறுத்தி பேசினார்.  ஆர்பாட்டத்திற்கு அகில இந்திய இந்து மக்கள் கட்சி பொதுச் செயலாளர் எல்லப்பன் தலைமையேற்று ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். மாநில செயலாளர் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நவோதயா பள்ளிகள் வேண்டுமென்று ஆர்ப்பாட்டம் விஜயகுமார், இந்து மக்கள் கட்சி மூத்த தலைவர் மயிலை  குமரவேல், இந்து சேவா சங்கத் தலைவர் ஆவடி ஸ்டாலின், இந்து மறுமலர்ச்சி முன்னேற்ற முன்னணி தலைவர் வினோத் மற்றும் அகில இந்திய இந்து மக்கள் கட்சி பொறுப்பாளர்கள், மகளிர் அணி பொறுப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக இந்து மற...

5493 கேங் மேன்களுக்கு உடனடியாக பணி ஆணை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

  திருவண்ணாமலை வேங்கிக்காலில் உள்ள தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின்சார வாரிய கேங்மேன் தொழிற்சங்கம் சார்பில் தமிழக அரசு மின்சார வாரியத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் கேங்மேன் பணியாளர்களின் மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டமானது நடைபெற்றது.  இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான கேங்மேன்கள் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதோடு மட்டுமல்லாமல் அனைவரும் தங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.  தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 63 ஆயிரம் காலி பணியிடங்கள் உள்ள நிலையில் மின்வாரிய அனைத்து பணிகளையும் மேற்கொண்டு வரும் கேங்மேன் பணியாளர்களை உடனடியாக கள உதவியாளராக மாற்ற வேண்டும்,  குடும்பத்தை பிரிந்து 400 முதல் 500 கிலோ மீட்டர் தூரத்தில் பணி அமர்த்தப்பட்டு கடுமையான பணிச் சுமையிலும் மன அழுத்தத்துடனும் பணி மேற்கொண்டு வரும் கேங்மேன் பணியாளர்கள் அனைவரையும் சொந்த ஊருக்கு இடம் மாற்றம் செய்ய வேண்டும்,  உடல் தகுதி தேர்வு மற்றும் எழுத்து தேர்...