ஸ்ரீ புற்று பாலநாகாத்தம்மன் ஆலய 10ம் ஆண்டு நாகசதுர்த்தி விழா, பெண்கள் 108 பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து அம்மனுக்கு அபிஷேகம்
திருவண்ணாமலை மாவட்டம், வடப்புழுதியூர் மதுரா முனியப்பன்தாங்கல் கிராமத்தில் எழுந்தருளி அருள் பாலித்து வரும் ஸ்ரீ புற்று பாலநாகாத்தம்மன் ஆலய 10ம் ஆண்டு நாகசதுர்த்தி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
இன்று காலை 8 மணிக்கு ஸ்ரீ விநாயகர் ஆலயத்தில் இருந்து ஏராளமான பெண்கள் 108 பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து சுவாமிக்கு அபிஷேகம் செய்தனர். பின்னர் ஸ்ரீ புற்று பாலநாகாத்தம்மனுக்கு சிறப்பு யாகம் நடத்தப்பட்டது.
இந்த யாகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தங்கள் வேண்டுதல்களை வைத்து வணங்கினர். சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் இதில் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டு அம்மன் அருள் பெற்றனர்.
நாகசதுர்த்தி விழாவில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று மாலை தீமிதி திருவிழாவும் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.
ஸ்ரீ புற்று பாலநாகாத்தம்மன் அறக்கட்டளை, முனியப்பந்தாங்கல் கிராம பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் நாகசதுர்த்தி விழாவினை சிறப்பான முறையில் நடத்தினர்.
சிறப்பு அழைப்பாளர்களாக தேவர் வாழ்க்கை வரலாறு திரைப்பட தயாரிப்பாளரும், தேசிய தலைவர் திரைப்பட தயாரிப்பாளருமான ஏ.எம்.சௌத்ரி தேவர், தேவர் வரலாற்று ஆய்வாளர் பி.எஸ்.தவமணி, தனித்தமிழர் மறுமலர்ச்சி கழக நிறுவனத் தலைவரும், நாளைய தீர்ப்பு பத்திரிகையின் ஆசிரியருமான டாக்டர் சிறியூர் செல்லப்பாண்டி உள்ளிட்ட ஏராளமானோர் யாகத்தில் கலந்து கொண்டு அம்மனை வேண்டி வழிபட்டனர்.







Comments
Post a Comment