திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் வட்டம், ராஜந்தாங்கல் ஊராட்சி, தளவாய்குளம் கிராமத்தில் உள்ள புனித மேரி மாதா கெபி கோயில் அமைந்துள்ள இடத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்கள் நலமுடன் வாழ வேண்டும் என்பதற்காக சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது.
சாணிபூண்டி, கெங்கம்பட்டு, ஆவூர், பவுத்திரம், தளவாய்குளம், ராஜந்தாங்கல் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு புனித மேரி மாதா மற்றும் இயேசு கிறிஸ்துவை மன்றாடி வழிபாடு நடத்தினர்.
இந்திய சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 அன்று ஒவ்வொரு ஆண்டும் இந்த சிறப்பு தொழுகை நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆகஸ்ட் 15 அன்று பிறந்தநாள் காணும் குழந்தைகள் உள்ளிட்ட அனைவருக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து கூட்டு பிரார்த்தனை பங்கு தந்தையர்கள் தலைமையில் சிறப்பான முறையில் நடைபெற்றது.

Comments
Post a Comment