திருவண்ணாமலை மாவட்டம், குங்குிலிநத்தம் கிராமத்தில் எழுந்தருளி அருள்பாளித்து வரும் மாரியம்மன் திருக்கோயில் கூழ் வார்த்தல் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
அம்மன் கிரகம், ஆண்டவர் கிரகம், அம்மன் கிரகம் என 3 கிரகங்கள் ஜோடித்து ஊர்வலமாக வந்து கிராமத்தில் உள்ள பொதுமக்கள் தங்கள் வீடுகளில் சுவாமிக்கு பாத அபிஷேகம் செய்து தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி தீபாரதனை காட்டி வழிபட்டனர்.
மாரியம்மன் கோயில் வளாகத்தை 3 கிரகம் அடைந்த பிறகு பக்தர்கள் தங்கள் வீடுகளில் இருந்து எடுத்து வந்த கூழை பெரிய கொப்பரையில் ஊற்றி பொது மக்களுக்கு படைக்கப்பட்ட கூழ் ஆனது பரிமாறப்பட்டது.
தர்மகர்த்தா ஜி.சந்தோஷ், ஆர்.அண்ணாமலை, சீதாராமன், திருவேங்கடம், பாலகிருஷ்ணன், ஏழுமலை, விஜயமூர்த்தி, தசரதன், பிரசாந்த் உள்ளிட்ட ஏராளமானோர் கூழ் ஊற்றும் திருவிழாவில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர். கிராமத்தில் ஆடி மாதத்தில் கூழ் ஊற்றினால் மழை பெய்யும் என்பது ஐதீகமாகும்.

Comments
Post a Comment