திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் வட்டம், செல்லங்குப்பம் கிராமத்தில் கூழ்வார்த்தை திருவிழா நடைபெற்றது. இதில் அம்மன் சுவாமிக்கு கரகம் ஜோடித்து அனைத்து பொதுமக்களும் தங்கள் வீடுகளில் இருந்து கூழ் ஊற்றி எடுத்து வந்து கோயில் வளாகத்தில் கூழ் ஊற்றினர். கோயில் வளாகத்தில் படைக்கப்பட்ட கூழினை அனைவரும் பெற்றுச் சென்றனர்.
செல்லங்குப்பம் கிராம பொதுமக்கள் சார்பாக கூழ் ஊற்றும் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் கிராமத்தில் உள்ள அனைவரும் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
சக்தி கிரகம், ஆண்டவன் கிரகம், மாரியம்மன் கிரகம் ஆகிய கிரகமானது பம்பை உடுக்கை, மேளதாளம் முழங்க ஊர் சுற்றி வந்து பக்தர்களை அருள்பாலித்தது.
கோயில் சம்பந்தமாக இரு பிரிவினருடைய ஏற்கனவே ஏற்பட்ட தகராறு காரணமாக டிஎஸ்பி தலைமையில் 40க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு அளித்தனர்.

Comments
Post a Comment