பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வழிவகை செய்யும் மசோதாவை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 16 அம்ச தீர்மானங்களை தமிழ்நாடு பெண்கள் இணைப்பு குழுவின் 29 வது மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது
திருவண்ணாமலை மீனாட்சி திருமண மண்டபத்தில் தமிழ்நாடு பெண்கள் இணைப்பு குழுவின் 29 வது மாநில மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பெண்களை உள்ளடக்கிய முன்னேற்றம் என்ற தலைப்பில் இரண்டு நாட்கள் 29 வது மாநில மாநாடு நடைபெற்றது.
இதில் தமிழகம் முழுவதும் இருந்து 500க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு மாநில மாநாட்டின் துவக்கமாக கொடி ஏற்றி துவக்கி விழா நடைபெற்றது. பெண்களை உள்ளடக்கிய முன்னேற்றம் என்ற தலைப்பில் பட்டிமன்றமும் மறுநாள் மிகப் பிரமாண்டமான பொதுக்கூட்டமும் திருவண்ணாமலை திருவூடல் தெருவில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு மாநில தலைவி திருமதி ஷீலு தலைமை தாங்கினார். திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுமதி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரையும் வரவேற்று நிகழ்ச்சியை வழி நடத்தினார்.
சிறப்பு அழைப்பாளர்களாக குற்றவியல் காவல் ஆய்வாளர் கவிதா, ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் வீரமணி, பேராசிரியர் கனிமொழி, மருத்துவர் அனுராதா, மாநிலச் செயலாளர் பொன்னுத்தாய், கன்னியாகுமரி மாவட்டம் லிட்வின் மேரி உள்ளிட்ட 22 மாவட்டங்களைச் சேர்ந்த மகளிர் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
பொதுக் கூட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
மகளிருக்கு மாநில நிதி அறிக்கையில் 50 சதவீதம் நிதி ஒதுக்கப்பட வேண்டும், பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும், பாலின பிரச்சனைகளை கண்காணிக்க ஒவ்வொரு கிராம அளவில் கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும், சட்டமன்றம் மற்றும் பாராளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வழிவகை செய்யும் மசோதாவை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 16 அம்ச தீர்மானங்களை இந்த மாநில மாநாட்டில் நிறைவேற்றினர்.





Comments
Post a Comment