100 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த ஸ்ரீ செல்வ முத்து மாரியம்மன் ஆலயதத்தின் மகாலட்சுமி மகா கும்பாபிஷேகம் 15 ஆண்டுகளுக்குப் பிறகு வெகு விமரிசையாக நடைபெற்றது
அருள்மிகு ஸ்ரீ செல்வ முத்து மாரியம்மன் ஆலய அஷ்டபந்தன புனராவர்த்தன மகா கும்பாபிஷேகம், 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் வட்டம், பன்னியூர் கிராமத்தில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ செல்வ முத்து மாரியம்மன் ஆலய புனராவர்த்தன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட பொதுமக்களும், பக்தர்களும் கலந்து கொண்டு கும்பாபிஷேக நிகழ்வுகளை தரிசித்து அருள்மிகு ஸ்ரீ செல்வ முத்து மாரியம்மன் அருளை பெற்றனர்.
நேற்று கும்பாபிஷேக நிகழ்வுகள் மங்கள இசை, அனுக்ஞை மகா கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம், கோபூஜை, புதிய சிலைகள் கண் திறத்தலுடன் துவங்கியது.
பின்னர் வாஸ்து சாந்தி, பிரவேசபலி, முதற்கால யாக பூஜைகள் ஆரம்பிக்கப்பட்டு பூர்ணாஹுதி, தீபாராதனை, சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இன்று காலை மங்கள இசையுடன் இரண்டாம் கால யாக பூஜைகள் ஆரம்பிக்கப்பட்டு சிலைகளுக்கு உயிர் தரப்பட்டு பூர்ணாஹுதியுடன் தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் யாகசாலையில் இருந்து கலசம் புறப்பட்டு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க அருள்மிகு ஸ்ரீ செல்வ முத்துமாரியம்மன் சுவாமிக்கு மகா கும்பாபிஷேகம் 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் முன்னிலையில் வெகு விமரிசையாக நடைபெற்றது. அப்போது கூடியிருந்த திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.
அருள்மிகு ஸ்ரீ செல்வ முத்து மாரியம்மன் ஆலய மூலஸ்தான கும்பாபிஷேகம் நடைபெற்று பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. பின்பு தீபாரதனை நடைபெற்று கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
பன்னியூர் கிராம ஊராட்சிமன்ற தலைவர் கே.சாமிநாதன், ஸ்ரீ செல்வ முத்து மாரியம்மன் ஆலய தர்மகர்த்தா, நாட்டாண்மை, ஆலய விழா குழுவினர், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கும்பாபிஷேக நிகழ்வினை சிறப்பான முறையில் நடத்தினர்.





Comments
Post a Comment