திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், வீரானந்தல் மதுரா அடிவாரம் கோரை ஆற்றங்கரை GPR பண்ணையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முனிஸ்வரன் மற்றும் ஸ்ரீ ரேணுகாம்பாள் ஆகிய தெய்வங்களுக்கு பிரதிஷ்டை செய்து ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.
இந்த கும்பாபிஷேக நிகழ்வில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.
இன்று அதிகாலை கிராம தேவதைக்கு பிரார்த்தனை செய்து கோ பூஜை, ஸ்ரீ கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவகிரக பூஜை, பூர்ணாஹூதி மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.
பின்னர் அருள்மிகு ஸ்ரீ முனீஸ்வரருக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்று தீப ஆராதனையை தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
ஸ்ரீ முனீஸ்வரர் ஆலய நிர்வாகிகள், அடிவாரம் ஜி.என் பாளையம் புதுப்பட்டான் வகையறா, பழவா கவுண்டர் கவுண்டர் வகையறா, கீழ்குப்பம் புதுபட்டான் வீட்டு வகையறா, மேல் குப்பம் மற்றும் ஊர் பொதுமக்கள் மகா கும்பாபிஷேக நிகழ்வுகளை சிறப்பான முறையில் நடத்தினர்.



Comments
Post a Comment