5493 கேங் மேன்களுக்கு உடனடியாக பணி ஆணை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
திருவண்ணாமலை வேங்கிக்காலில் உள்ள தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின்சார வாரிய கேங்மேன் தொழிற்சங்கம் சார்பில் தமிழக அரசு மின்சார வாரியத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் கேங்மேன் பணியாளர்களின் மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டமானது நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான கேங்மேன்கள் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதோடு மட்டுமல்லாமல் அனைவரும் தங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 63 ஆயிரம் காலி பணியிடங்கள் உள்ள நிலையில் மின்வாரிய அனைத்து பணிகளையும் மேற்கொண்டு வரும் கேங்மேன் பணியாளர்களை உடனடியாக கள உதவியாளராக மாற்ற வேண்டும்,
குடும்பத்தை பிரிந்து 400 முதல் 500 கிலோ மீட்டர் தூரத்தில் பணி அமர்த்தப்பட்டு கடுமையான பணிச் சுமையிலும் மன அழுத்தத்துடனும் பணி மேற்கொண்டு வரும் கேங்மேன் பணியாளர்கள் அனைவரையும் சொந்த ஊருக்கு இடம் மாற்றம் செய்ய வேண்டும்,
உடல் தகுதி தேர்வு மற்றும் எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்று மின்சார வாரிய நிர்வாக குழு அனுமதி வழங்கியும் பணி அமர்த்தப்படாமல் நிலுவையில் உள்ள 5493 கேங் மேன்களுக்கு உடனடியாக பணி ஆணை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின்சார வாரிய கேங்மேன் தொழிற்சங்க நிர்வாகிகள் கண்டன கோஷங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.



Comments
Post a Comment