வேணுகோபால சுவாமி ஆலய கும்பாபிஷேகம் மற்றும் ஸ்ரீ ராதா ருக்மணி சமேத வேணுகோபால சுவாமிக்கு 4ம் ஆண்டு திருக்கல்யாண வைபவம்
திருவண்ணாமலை மாவட்டம், மெய்யூர் கிராமத்தில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் ஸ்ரீ ராதா ருக்மணி சமேத ஸ்ரீ வேணுகோபால சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேகம் மற்றும் திருக்கல்யாண மகோத்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்று பக்தி முழக்கமிட்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர். கடந்த 5 நாட்களாக தினமும் காலை 8 மணி அளவில் நாலாயிர திவ்ய பிரபந்த சேவை திருக்கோயில் வளாகத்தில் நடைபெற்றது. இன்று காலை சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கலசம் புறப்பட்டு கோயில் உச்சியில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது திரண்டு இருந்த ஏராளமான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்று பக்தி முழக்கமிட்டனர். ஸ்ரீ ராதா ருக்மணி சமேத வேணுகோபால சுவாமிக்கு 4ம் ஆண்டு திருக்கல்யாண வைபவமும் நடைபெற்றது. அதனை அடுத்து அனைவருக்கும் தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டு, அனைவருக்கும் அறுசுவை அன்னதானமும் வழங்கப்பட்டது. விழா குழுவினர் மற்றும் மெய்யூர் ஊர் பொதுமக்கள் சார்பாக கும்பாபிஷேகம் மற்றும் திருக்கல்யாண மகோத்சவம் சிறப்பான முறையில் நடைப...