கஞ்சா, கள்ளச்சாராயம், திருட்டுத்தனமாக மது பாட்டில்கள் விற்பதை கண்டித்து 400க்கும் மேற்பட்ட பெண்கள் ஆர்ப்பாட்டம், விற்பனையை தடுக்க 2 நாட்களில் நடவடிக்கை எடுப்பதாக காவல்துறை உறுதி அளித்ததால் போராட்டம் வாபஸ்
திருவண்ணாமலை தெற்கு மாவட்டம், துரிஞ்சாபுரம் கிழக்கு ஒன்றியம், கோவூர் ஊராட்சியில் கள்ளச்சாராயம், கஞ்சா, திருட்டுத்தனமாக மது பாட்டில்கள் பல மாதங்களாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.குடி போதையால் பாதிப்புக்குள்ளான 400 க்கும் மேற்பட்ட பெண்கள் ஆத்திரமடைந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கஞ்சா விற்பனை, கள்ளச்சாராய சந்தையாக
கோவூர் ஊராட்சி மாறி உள்ளதாக பெண்கள் குற்றச்சாட்டு தெரிவித்து ஆவேசமாக போராட்டத்தில் ஈடுபட்டனர் தகவல் அறிந்த காவல் துறை அதிகாரிகள் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு விரைந்து வந்து நாங்கள் இரண்டு நாட்களில் கள்ளச்சாராயம் கஞ்சா திருட்டு தனமாக விற்கும் மதுபாட்டில் முழுவது தடைசெய்யப்பட்டு மதுவில்லாத கிராமமாக கோவூர் ஊராட்சி இருக்க தகுந்த நடவடிக்கை எடுப்பது உறுதி என காவல்துறை அதிகாரிகள் பொதுமக்களிடம் உறுதி அளித்தனர் பின்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது .
பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணன் திரு.கே. அண்ணாமலை Ex IPS அவர்களின் ஆணையின்படியும், மாநில பொதுச் செயலாளர் திருமதி. P.கார்த்தியாயினி அவர்களின் ஆனைக்கினங்க திருவண்ணாமலை தெற்கு மாவட்ட தலைவர் அண்ணன் R. பாலசுப்பிரமணியன் பி.எஸ் அவர்களின் ஆலோசனைபடியும் மற்றும் மாவட்ட பொதுசெயலாளர் கே.எம்.குமாராஜா
ஒன்றியத்தலைவர் கவிஞர் அ.தங்கராஜி எம்.ஏ தலைமையில் கஞ்சா, கள்ளச்சாராயம், கள்ளச் சந்தையின் மது விற்பனை உள்ளிட்டவற்றை தடுக்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. துரிஞ்சாபுரம் கிழக்கு ஒன்றிய துணைத் தலைவர் சே.விஜயகுமார் அவர்கள் கலந்து கொண்டனர் உள்ளிட்ட 400 க்கும் மேற்பட்ட கோவூர் கிராமத்தைச் சேர்ந்த பெண்களும், பொதுமக்களும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த கலசப்பாக்கம் காவல் நிலைய போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மற்றும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். கள்ளச்சாராயம், கள்ளச் சந்தையில் மது விற்பனை, கஞ்சா விற்பனை உள்ளிட்டவற்றை தடுத்து நிறுத்த வேண்டும் என்று காவல்துறை அதிகாரிகளிடம் பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண்களிடம் இரண்டு நாட்களில் கஞ்சா, கள்ளச்சாராயம், கள்ளச் சந்தையில் மதுபாட்டில் விற்பனை உள்ளிட்டவற்றை தடுப்பதற்கான உரிய நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் உறுதி அளித்ததன் பேரில் பெண்கள் போராட்டத்தை கைவிட்டு களைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.






Comments
Post a Comment