தமிழக அரசு பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலை நகரில் உள்ள முதன்மை கல்வி அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பாக மாநிலம் தழுவிய மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்த வேண்டும், தலைமை ஆசிரியர் பதவி உயர்வு நடந்த பின்பு பொது மாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும், கற்றல் கற்பித்தல் பணிகளில் மட்டுமே ஆசிரியர்களை கல்வித்துறை ஈடுபடுத்த வேண்டும், பழைய நடைமுறையிலேயே வருமான வரி பிடித்தம் செய்ய வேண்டும், அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர், மாணவர்களுக்கும் அரசு பள்ளி போன்று அனைத்து சலுகைகளும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தீபக்குமார் தலைமையில் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் தமிழக அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பி நடைபெற்றது.
மாவட்ட இணைச் செயலாளர் ஆனந்தலட்சுமி வரவேற்றார். மாவட்டப் பொருளாளர் திருநாவுக்கரசு வாழ்த்துரை வழங்கினார். மாவட்டச் செயலாளர் தோழர் கிருஷ்ணமூர்த்தி கோரிக்கை விளக்க உரையாற்றினார். மாநிலத் துணைத் தலைவர் சந்திரசேகரன் உள்ளிட்ட தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் 50க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பி தங்கள் கோரிக்கையை முன்வைத்து கோஷமிட்டனர். நிறைவாக மாவட்ட அமைப்புச் செயலாளர் திருமாவளவன் நன்றி கூறினார்.



Comments
Post a Comment