திருவண்ணாமலை மாவட்ட ஜப்பான் சிட்டோ ரியூ கராத்தே யூனியன் சார்பில் மாபெரும் கராத்தே பயிற்சி முகாம் நடைபெற்றது
திருவண்ணாமலை மாவட்ட ஜப்பான் ஷிட்டோ - ரியூ கராத்தே யூனியன் சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை (23.06.24) கட்டா பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் 50க்கும் மேற்பட்ட கராத்தே பயிற்சியாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு சாய் வித்யாஸ்ரமம் பள்ளியில் 12 கட்டா வரை பயிற்சி அளிக்கப்பட்டது .
இந்நிகழ்ச்சியில் சீனியர் மாஸ்டர் மாவட்ட தலைவர் .S.சரவணன் MBA, MTech, மாவட்ட செயலாளர் M.மூர்த்தி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. கராத்தே பயிற்சி முகாமில் சீனியர் மாஸ்டர்கள் கராத்தே A.S.பிரபாகர், கராத்தே R.சுப்பிரமணி, கராத்தே விஜயகுமார்-தண்டராம்பட்டு , கராத்தே அசோக்குமார், கராத்தே மணிகண்டன் கீழ் நாச்சிப்பட்டு, போலீஸ் கராத்தே விஜய் , கராத்தே ஜான்சி, கராத்தே சந்தோஷ், கராத்தே அம்பேத்கர் பிரியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இறுதியாக மாவட்ட பொருளாளர் கராத்தே ம.வெங்கடேசன் நன்றி கூறினார். இறுதியாக பள்ளி தாளாளர் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி மரியாதை செலுத்தப்பட்டது. பயிற்சியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.



Comments
Post a Comment