மாரியம்மன் கோயில் கூழ்வார்த்தல் திருவிழா, கற்பூரம் ஏற்றி,தேங்காய் உடைத்து, தீபாரதனை காட்டி வழிபட்ட பக்தர்கள்
திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் வட்டம், பூதமங்கலம் மதுரா துர்கம் கிராமத்தில் மாரியம்மன் திருக்கோயில் கூழ்வார்த்தல் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. சக்தி கரகம், அம்மன் கரகம், பூவாடை கரகம் உள்ளிட்ட 3 கரகங்கள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
வீதி உலாவின்போது ஊர் பொதுமக்கள் சுவாமிக்கு கற்பூரம் ஏற்றி,தேங்காய் உடைத்து, தீபாரதனை காட்டி வழிபட்டனர். மேளதாளத்துடன் 3 கரகங்கள் வீதி உலா வந்த போது சிறுவர்கள் குத்தாட்டம் போட்டு மகிழ்ந்தனர். ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் ஏற்பாட்டில் கூழ் வார்த்தல் திருவிழா சிறப்பான முறையில் நடைபெற்றது.
கூழ்வார்த்தல் திருவிழாவை ஒட்டி பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்தனர். கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளில் இருந்தும் பக்தர்கள் எடுத்து வந்த கூழினை மாரியம்மன் கோவில் வளாகத்தில் அம்மனுக்கு கூழை ஊற்றி அபிஷேகம் செய்து, தீபாரதனை செய்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வழிபட்டனர். பொதுமக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் கூழ் குடங்களை எடுத்து வந்து கோயில் வளாகத்தில் மாரியம்மன் ஆலயத்தில் கூழ் ஊற்றப்பட்டு பக்தர்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டது.
இன்று இரவு வான வேடிக்கையுடன் அம்மன் திருவீதி உலா வரும் அப்போது பக்தர்கள் அனைவரும் தேங்காய் உடைத்து விமான நிலையம் சாமி தரிசனம் செய்து வழிபடுவது வழக்கம் இதன் மூலம் கிராமத்தில் மழை வரும் என்பது பக்தர்களின் ஐதீகம்.
நாளை இரவு கூழ்வார்த்தல் திருவிழாவை ஒட்டி தெய்வீக நாடகமும் நடைபெறும்.





Comments
Post a Comment