Skip to main content

Posts

Showing posts from December, 2023

கோவூர் ஊராட்சியில் மாவட்ட அளவிலான மாரியம்மன் கபடி குழு 15ஆம் மாவட்ட அளவிலான கபடி போட்டி

  23.12.2023 சனிக்கிழமை துரிஞ்சாபுரம் கிழக்கு ஒன்றியம் கோவூர் ஊராட்சியில் மாவட்ட அளவிலான மாரியம்மன் கபடி குழு 15ஆம் மாவட்ட அளவிலான கபடி போட்டி திரு.மணிகண்டன் திரு.பாரதி. திரு.தங்கராஜி   நடைபெற்றது.  இதில் சிறப்பு அழைப்பாளராக திருவண்ணாமலை தெற்கு மாவட்ட தலைவர் அண்ணன் திரு. ஆர் பாலசுப்பிரமணியம் ஜி மற்றும் மாவட்ட பொது செயலாளர்கள் திரு. கே.எம் . குமார ராஜா அவர்கள் மாவட்ட ஐ டி பிரிவு தலைவர் திரு.தினகரன் அ.கோவிந்தராஜி மாவட்ட கலாச்சார பிரிவு  செயலாளர் மற்றும் ஒன்றிய துறைத்தலைவர் கே.ஆறுமுகம்  மற்றும் விளையாட்டு வீரர்கள் சுமார் 350 நபர்கள் மேல் விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டனர்.  இந்த விளையாட்டில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு துரிஞ்சாபுரம் கிழக்கு ஒன்றியம் சார்பில் மாவட்ட தலைவர் அவர்கள் முதல் பரிசாக ரூபாய் 10.021 வழங்கப்பட்டது.   மற்றும் துரிஞ்சாபுரம் கிழக்கு ஒன்றியம் சார்பில்  புதிய உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது இதில் நூற்றுக்கும் மேற்பட்ட நபர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது .                 ...

திருமண அமைப்பாளர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை

  திருவண்ணாமலை செட்டி தெருவில் உள்ள அமுதா திருமண மண்டபத்தில் தமிழ்நாடு பாரதிய திருமண அமைப்பாளர்கள் நல சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு பாரதிய திருமண அமைப்பாளர்கள் நல சங்கத்தின் மூன்றாவது மாநில பொதுக்குழு கூட்டத்தை பாரதிய மஸ்தூர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் விமேஸ்வரன் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். பி.எம்.எஸ் மாநில அமைப்பு செயலாளர் தங்கராஜ் சிறப்புரையாற்றினார். மாநில பொதுச் செயலாளர் செங்கம் என்.ராஜா சங்க நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்தார். மாநில செயல் தலைவர் சாந்தி தலைமை வகித்தார். மாநிலத் துணைத் தலைவர்கள் முருகன், ராமலட்சுமி மற்றும் மாநில பொறுப்பாளர்கள் சரவணகுமார், சந்திரகலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொருளாளர் சக்திராணி அனைவரையும் வரவேற்றார். நூற்றுக்கும் மேற்பட்ட சங்க நிர்வாகிகள் நிர்வாகிகள் தமிழகம் முழுவதுமிருந்து பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த மாநில பொதுக்குழு கூட்டத்தில் ஏற்கனவே பொறுப்பில் இருந்த பொதுக்குழுவானது கலைக்கப்பட்டு புதிதாக பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டனர். புதிய நிர்வாகிகள் த...

சிறகுகள் கல்வி சமூக அறக்கட்டளையின் எழுச்சிமிகு திறப்பு விழா

  திருவண்ணாமலை போளூர் சாலையில் உள்ள தனியார் அரங்கில் சிறகுகள் கல்வி சமூக அறக்கட்டளை திறப்பு விழா எழுச்சியுடன் பாடல்கள் பாடி ஆரவாரமான முறையில் கைத்தட்டல்களுடன் குத்துவிளக்கு ஏற்றி மிகச்சிறப்பாக நடைபெற்றது.  சிறகுகள் அறக்கட்டளை சார்பில் கல்வி வளர்ச்சி, சமூக வளர்ச்சி, மருத்துவ வளர்ச்சி, பொருளாதார முன்னேற்றம், மாணவர்களின் கல்வி வளர்ச்சி உள்ளிட்ட ஒட்டுமொத்த சமூக வளர்ச்சிக்காகவும் சிறகுகள் கல்வி சமூக அறக்கட்டளை துவங்கப்பட்டுள்ளது என திறப்பு விழாவில் பேசியவர்கள் வாழ்த்து பேசினர்.   மேலும் சிறகுகள் அறக்கட்டளையை பயன்படுத்தி சமுதாய மாணவர்கள் முன்னேற வேண்டும் என்பதை அடிப்படை நோக்கமாகக் கொண்டு இந்த அறக்கட்டளை செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  எழுச்சிமிகு அறக்கட்டளை திறப்பு விழா நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுரேஷ்குமார், மூத்த வழக்கறிஞர் சித்தார்த் கௌதம், அஇஅதிமுக மாணவர் அணி தலைவர் அன்புமணி, முன்னாள் நகர மன்ற உறுப்பினர் ரத்தினகுமார், எல்ஐசி சக்திவேல், ராமதாஸ், கோவிந்தராஜ், அம்பேத்கர், வழக்கறிஞரும் மாவட்ட அறங்காவலர்கள் நியமன குழு உறுப்பினருமான வெங்கடேசன், ...

பர்வதமலை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் கால்நடை தீவன அங்காடி திறப்பு விழா சிறப்பான முறையில் நடைபெற்றது

  திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் வட்டம், கடலாடி கிராமத்தில், பர்வதமலை உழவர் உற்பத்தியாளர் கம்பெனி சார்பில் கால்நடை தீவன அங்காடி திறப்பு விழா வழக்கறிஞர் ப.கி.தனஞ்செயன் தலைமையில் நடைபெற்றது.  கலசப்பாக்கம் வேளாண்மை உதவி இயக்குனர் ஜி.முருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கால்நடை தீவன அங்காடியை ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.செயலாளர் சுபாஷ், ஐ இ டி ஒருங்கிணைப்பாளர் மோகன்ராஜ், செந்தில், அன்பழகன் உள்ளிட்ட ஏராளமானோர் உடன் இருந்தனர். திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் வட்டம், கடலாடி கிராமத்தில், பர்வதமலை உழவர் உற்பத்தியாளர் கம்பெனி சார்பில் கால்நடை தீவன அங்காடி திறப்பு விழா வழக்கறிஞர் ப.கி.தனஞ்செயன் தலைமையில் நடைபெற்றது. சர்வம் இயற்கை பண்ணை விவசாயி கமலக்கண்ணன் வரவேற்புரை நிகழ்த்தினார். தர்மபுரியைச் சேர்ந்த இஐடி ஒருங்கிணைப்பாளர் மோகன்ராஜ் மற்றும் செயலாளர் சுபாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலசப்பாக்கம் வேளாண்மை உதவி இயக்குனர் ஜி.முருகன் அவர்கள் கலந்து கொண்டு கால்நடை தீவன அங்காடியை ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். பின்னர் பேசிய அவர் விவசாயிக...

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

  திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன்பு தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தினர் 300க்கும் மேற்பட்டோர் தமிழக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்களில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், 70 வயது முதிர்வுற்ற ஓய்வூதியருக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும், அங்கன்வாடி, ஊராட்சி செயலர், கிராம உதவியாளர், வனத்துறை தொகுப்பூதிய ஊழியர் உள்ளிட்ட ஓய்வூதியர்களுக்கு குறைந்த பட்ச பென்ஷன் ரூபாய் 7850 வழங்க வேண்டும், மருத்துவ காப்பீட்டை முறையாக குறைபாடுகள் இன்றி அமுல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 5 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தினர் கண்களில் கருப்பு துணி கட்டி தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்ததால் மாவட்ட ஆட்சியர் நுழைவு வாயில் முன்பு சிறிது நேரம் பரபரப்பு காணப...

இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் டாக்டர் அம்பேத்கருக்கு மாவட்ட தலைவர் விஜயராஜ் மாலை அணிவித்து மரியாதை!

  இந்தியாவின் அரசியலமைப்பு சட்டத்தை வடிவமைத்த சட்ட மாமேதை, புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 67 வது நினைவு நாள் இன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 67வது நினைவு நாளை முன்னிட்டு திருவண்ணாமலை தலைமை தபால் நிலையம் அருகில் உள்ள அன்னாரது திருஉருவ சிலைக்கு திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக எஸ்.சி அணி மாவட்ட தலைவர் விஜயராஜ் தலைமையில் மலர் மாலை அணிவித்து மலர் தூவி வணங்கி மரியாதை செலுத்தப்பட்டது. அப்போது ஏராளமான பாஜகவினர் மலர் மாலை தூவி அம்பேத்கர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மரியாதை செலுத்தினர். மேலும் திமுக அதிமுக மதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாஜக உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளர் அறவாழி தலைமையில் இனிப்பு வழங்கி வெற்றி கொண்டாட்டம்

  மத்தியபிரதேஷ், ராஜஸ்தான், சட்டீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பாஜக பெரும்பான்மையுடன் அமோக வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக திருவண்ணாமலை அடுத்த தண்டராம்பட்டு பேருந்து நிலையம் அருகே பாஜக உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளர் அறவாழி தலைமையில் ஏராளமான பாஜகவினர் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். இந்த வெற்றி கொண்டாட்டத்தில் மாவட்ட துணைத் தலைவர் மற்றும் தண்டராம்பட்டு மத்திய ஒன்றிய பார்வையாளர் ராஜ்குமார், முன்னாள் மாவட்ட தலைவர் விஜயன், ஒன்றிய தலைவர் சத்தியராஜ் உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி, பட்டாசுகள் வெடித்து மூன்று மாநில தேர்தல் வெற்றியை கோலாகலமாக கொண்டாடினர்.

அடையாறு மருத்துவமனை மருத்துவர்களால் கிராமங்களில் புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது

திருவண்ணாமலை மாவட்டம், துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியம், பாலானந்தல் ஊராட்சியில் உள்ள அங்கன்வாடி மையம் வளாகத்தில் ஊராட்சி மன்ற தலைவர் மாணிக்கவேல் தலைமையில் புற்றுநோய் விழிப்புணர்வு மற்றும் ஆரம்ப நிலை பரிசோதனைகளை திருவண்ணாமலை அரசு பழைய மருத்துவமனை வளாகத்தில் இயங்கி வரும் அடையாறு புற்றுநோய் மருத்துவமனை மருத்துவ குழுவினர் டாக்டர் லாவண்யா தலைமையில் கர்ப்பப்பை புற்றுநோய், வாய் புற்றுநோய், மார்பக புற்றுநோய் பரிசோதனை செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் 30 நபர்களுக்கும், ஆண்கள் 20 நபர்களுக்கும் என மொத்தம் 50 நபர்களுக்கு ஒரு நாளைக்கு இந்த கிராமத்தில் புற்றுநோய் பரிசோதனையானது மருத்துவர்களால் மேற்கொள்ளப்பட்டது. இந்த பரிசோதனை முகாம் பாலானந்தல் ஊராட்சியில் தொடர்ந்து ஒரு வாரம் நடைபெறும் என்பதால் இந்த வாய்ப்பினை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு ஊராட்சி மன்ற தலைவர் மாணிக்கவேல் அவர்கள் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளார். திருவண்ணாமலை வட்டத்தில் உள்ள 69 கிராமங்களில் புற்றுநோய் பரிசோதனை முகாம் கடந்த 5 வருடங்களாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக தற்போது துரிஞ்சாபுரம...