மத்தியபிரதேஷ், ராஜஸ்தான், சட்டீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பாஜக பெரும்பான்மையுடன் அமோக வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக திருவண்ணாமலை அடுத்த தண்டராம்பட்டு பேருந்து நிலையம் அருகே பாஜக உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளர் அறவாழி தலைமையில் ஏராளமான பாஜகவினர் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
இந்த வெற்றி கொண்டாட்டத்தில் மாவட்ட துணைத் தலைவர் மற்றும் தண்டராம்பட்டு மத்திய ஒன்றிய பார்வையாளர் ராஜ்குமார், முன்னாள் மாவட்ட தலைவர் விஜயன், ஒன்றிய தலைவர் சத்தியராஜ் உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி, பட்டாசுகள் வெடித்து மூன்று மாநில தேர்தல் வெற்றியை கோலாகலமாக கொண்டாடினர்.



Comments
Post a Comment