தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், 70 வயது முதிர்வுற்ற ஓய்வூதியருக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும், அங்கன்வாடி, ஊராட்சி செயலர், கிராம உதவியாளர், வனத்துறை தொகுப்பூதிய ஊழியர் உள்ளிட்ட ஓய்வூதியர்களுக்கு குறைந்த பட்ச பென்ஷன் ரூபாய் 7850 வழங்க வேண்டும், மருத்துவ காப்பீட்டை முறையாக குறைபாடுகள் இன்றி அமுல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 5 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தினர் கண்களில் கருப்பு துணி கட்டி தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்ததால் மாவட்ட ஆட்சியர் நுழைவு வாயில் முன்பு சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். மாவட்டத் துணைத் தலைவர்கள் சோனாச்சலம், ரகுபதி, தங்கராஜ், திருவேங்கடம், மாவட்ட இணை செயலாளர்கள் ராஜகோபால், மல்லிகா, மாணிக்கம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்டச் செயலாளர் பச்சையப்பன் கோரிக்கைகளின் விளக்க உரை நிகழ்த்தினார். மாநிலச் செயலாளர் சுப்பிரமணியன் சிறப்புரை ஆற்றினார். ராஜா, பார்த்திபன், நீதிமாணிக்கம், மணிவண்ணன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். இறுதியாக மாவட்ட பொருளாளர் ஆனந்தன் நன்றியுரை ஆற்றினார்.



Comments
Post a Comment