பர்வதமலை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் கால்நடை தீவன அங்காடி திறப்பு விழா சிறப்பான முறையில் நடைபெற்றது
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் வட்டம், கடலாடி கிராமத்தில், பர்வதமலை உழவர் உற்பத்தியாளர் கம்பெனி சார்பில் கால்நடை தீவன அங்காடி திறப்பு விழா வழக்கறிஞர் ப.கி.தனஞ்செயன் தலைமையில் நடைபெற்றது. கலசப்பாக்கம் வேளாண்மை உதவி இயக்குனர் ஜி.முருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கால்நடை தீவன அங்காடியை ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.செயலாளர் சுபாஷ், ஐ இ டி ஒருங்கிணைப்பாளர் மோகன்ராஜ், செந்தில், அன்பழகன் உள்ளிட்ட ஏராளமானோர் உடன் இருந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் வட்டம், கடலாடி கிராமத்தில், பர்வதமலை உழவர் உற்பத்தியாளர் கம்பெனி சார்பில் கால்நடை தீவன அங்காடி திறப்பு விழா வழக்கறிஞர் ப.கி.தனஞ்செயன் தலைமையில் நடைபெற்றது.
சர்வம் இயற்கை பண்ணை விவசாயி கமலக்கண்ணன் வரவேற்புரை நிகழ்த்தினார். தர்மபுரியைச் சேர்ந்த இஐடி ஒருங்கிணைப்பாளர் மோகன்ராஜ் மற்றும் செயலாளர் சுபாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலசப்பாக்கம் வேளாண்மை உதவி இயக்குனர் ஜி.முருகன் அவர்கள் கலந்து கொண்டு கால்நடை தீவன அங்காடியை ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.
பின்னர் பேசிய அவர் விவசாயிகள் நலன் கருதி அரசு உதவியுடன் செயல்படும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் விவசாயிகள் உறுப்பினர்களாகி பயன்பெற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
வழக்கறிஞர் ப.கி. தனஜெயன் தலைமை உரை ஆற்றுகையில், விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யக்கூடிய விலைப் பொருட்களை இடைத்தரகர் இன்றி அதிக லாபத்திற்கு விற்பனை செய்து மதிப்பு கூட்டி நிறுவனத்தின் மூலம் விற்பனை செய்து விவசாயிகள் லாபத்தை பங்கீடு வண்ணம் மத்திய அரசு நாபெட் உதவியுடன் பத்து கே திட்டத்தின் கீழ் தொடங்கியுள்ள பர்வதமலை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் விவசாயிகள் பங்குதாரராகி பயனடையுமாறு கேட்டுக் கொண்டார். தரமான விதைகள், பூச்சி மருந்துகள், உரங்கள் கால்நடை தீவனங்கள் ஆகியவற்றை பல கிராமங்களில் விற்பனை செய்ய குறைந்த விலையில் விவசாயிகளுக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கலசப்பாக்கம் ஒன்றிய விவசாயிகள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.
துணை வேளாண்மை அலுவலர் கணேசன், உதவி வேளாண்மை அலுவலர் சீனிவாசன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். அன்பழகன், சித்ரா, மல்லிகா அர்ஜுனன் உள்ளிட்ட இயக்குனர்களும் தீபன விநியோகஸ்தர் குபேந்திரன் வெங்கடேசன் கணக்காளர் ரஜினி உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இறுதியாக அசோக் குமார் நன்றி உரையாற்றினார்.





Comments
Post a Comment