அடையாறு மருத்துவமனை மருத்துவர்களால் கிராமங்களில் புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது
திருவண்ணாமலை மாவட்டம், துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியம், பாலானந்தல் ஊராட்சியில் உள்ள அங்கன்வாடி மையம் வளாகத்தில் ஊராட்சி மன்ற தலைவர் மாணிக்கவேல் தலைமையில் புற்றுநோய் விழிப்புணர்வு மற்றும் ஆரம்ப நிலை பரிசோதனைகளை திருவண்ணாமலை அரசு பழைய மருத்துவமனை வளாகத்தில் இயங்கி வரும் அடையாறு புற்றுநோய் மருத்துவமனை மருத்துவ குழுவினர் டாக்டர் லாவண்யா தலைமையில் கர்ப்பப்பை புற்றுநோய், வாய் புற்றுநோய், மார்பக புற்றுநோய் பரிசோதனை செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் 30 நபர்களுக்கும், ஆண்கள் 20 நபர்களுக்கும் என மொத்தம் 50 நபர்களுக்கு ஒரு நாளைக்கு இந்த கிராமத்தில் புற்றுநோய் பரிசோதனையானது மருத்துவர்களால் மேற்கொள்ளப்பட்டது.
இந்த பரிசோதனை முகாம் பாலானந்தல் ஊராட்சியில் தொடர்ந்து ஒரு வாரம் நடைபெறும் என்பதால் இந்த வாய்ப்பினை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு ஊராட்சி மன்ற தலைவர் மாணிக்கவேல் அவர்கள் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.
திருவண்ணாமலை வட்டத்தில் உள்ள 69 கிராமங்களில் புற்றுநோய் பரிசோதனை முகாம் கடந்த 5 வருடங்களாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக தற்போது துரிஞ்சாபுரம் வட்டத்தில் பாலானந்தல் ஊராட்சியில் புற்றுநோய் பரிசோதனை மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்று வருகிறது.
முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணசாமி மற்றும் ஊர் பொதுமக்கள் இந்த மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.





Comments
Post a Comment