இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் டாக்டர் அம்பேத்கருக்கு மாவட்ட தலைவர் விஜயராஜ் மாலை அணிவித்து மரியாதை!
இந்தியாவின் அரசியலமைப்பு சட்டத்தை வடிவமைத்த சட்ட மாமேதை, புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 67 வது நினைவு நாள் இன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.
சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 67வது நினைவு நாளை முன்னிட்டு திருவண்ணாமலை தலைமை தபால் நிலையம் அருகில் உள்ள அன்னாரது திருஉருவ சிலைக்கு திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக எஸ்.சி அணி மாவட்ட தலைவர் விஜயராஜ் தலைமையில் மலர் மாலை அணிவித்து மலர் தூவி வணங்கி மரியாதை செலுத்தப்பட்டது.
அப்போது ஏராளமான பாஜகவினர் மலர் மாலை தூவி அம்பேத்கர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மரியாதை செலுத்தினர். மேலும் திமுக அதிமுக மதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.



Comments
Post a Comment